இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

427 0

2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தி கிரேட் இந்தியன் கிச்சன் இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. தி கிரேட் இந்தியன் கிச்சன் இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, ”கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை” என்று கூறினார்.

Related Post

வேகவைத்த உருளைக்கிழங்கை குளிர்சாதன பெட்டியில் வைப்பது இந்த ஆபத்தான நோயை உண்டாக்குமாம்… ஜாக்கிரதை…!

Posted by - November 28, 2023 0
வேகவைத்த உருளைக்கிழங்கு எண்ணற்ற சமையலறைகளில் பல்துறை மற்றும் பிரியமான உணவாக இருக்கிறது, ஆனால் இதனை சேமிப்பது என்று வரும்போது, அதற்கு குளிர்சாதன பெட்டி சரியான இடமாக இருக்காது.…

சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

Posted by - December 13, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை…

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - March 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *