ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

294 0

வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான என பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமான வரி அதிகாரிகள் வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் காத்திருந்து அதன்பிறகு சோதனையை தொடர்ந்தனர்.இதுபோலவே கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்திலும் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Post

காலை 10 மணி வரை நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - டிசம்பர் 11, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை, திருநெல்வேலி,…
MK Stalin

MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

Posted by - செப்டம்பர் 15, 2026 0
DMK MK Stalin: இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK MK Stalin: திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை…
தி.நகர் கூட்டு சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்

தி.நகர் கூட்டு சோதனை: 56 குற்றவாளிகள் விசாரணை, 3 பேர் கைது

Posted by - நவம்பர் 20, 2026 0
தி.நகர் கூட்டு சோதனை சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலுமாகத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனைகளில்…

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - ஜனவரி 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - மார்ச் 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன