உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் – ஈபிஎஸ்
உதயநிதி அமைச்சராகவுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி அமைச்சராவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும் அவர் அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் என தெரிவித்தார்.
Related Post
நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர்…
எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு
RS BHarathi | நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம் – ஆர்.எஸ்.பாரதி கட்சிக்கு…
விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: ஜான் ஆரோக்யசாமிக்கு ஸ்கெட்சா: வேலையை ஆரம்பித்த ஆதவ்.!
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் , தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிசோரை சந்திக்க வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல்…
”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?
”இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத, திமுகவின் கட்டமைப்புக்கு அருகே கூட வர முடியாத விஜய்க்கு பதில் சொல்லி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என அறிவுறுத்தல்”…
தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (293)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

- திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

- “என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

- சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

- எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

