உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் – ஈபிஎஸ்
உதயநிதி அமைச்சராகவுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி அமைச்சராவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும் அவர் அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் என தெரிவித்தார்.
Related Post
பாஜகவில் இணைந்தார் விஜயதரணி… இணைந்தது ஏன் என்றும் விளக்கம்
டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…
“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…
விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம்…
லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சினைகளை பட்டியல் எடுக்க கூறியுள்ளார். தமிழக அரசியல் களம்…
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது…
Categories
- Sports (85)
- TN Political Zone (350)
- Trending Tamil (711)
- Viral Social (14)
- அரசியல் (231)
- இந்தியா (478)
- உலகம் (174)
- சினிமா (827)
- தமிழ்நாடு (1,145)
Recent Posts
- தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

- முதலமைச்சர் விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

- Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.?

- MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ!

- CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்..

