ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.. திருப்பி அளிக்கப்படும் டிக்கெட் கட்டணம்

193 0

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர்.சினிமாவில் 30 வருடம்: இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் | AR Rahman  Concert on behalf of his 30 years in cinema - hindutamil.in
அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனர் ஹேமந்த், “இசை நிகழ்ச்சியின் போது நடைபெற்ற அனைத்து விசயங்களுக்கு நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம். சமீப நாட்களாக ஒரு சில பேர் சமூக வலைதளத்தில் ஏ.ஆர்.ரகுமானை தாக்கி பதிவிட்டு வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானுக்கும் இந்த அசவுகரியங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவரை தாக்க வேண்டாம். மேலும், இந்த இசை நிகழ்ச்சிக்கு பணம் செலுத்தி பங்கேற்க முடியாதவர்களுக்கு மிக விரைவில் பணம் திருப்பி செலுத்தப்படும்” என்று பேசினார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் டிக்கெட்டியின் நகலை உரிய இமெயில் ஐடிக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் நகலை சரிபார்த்து அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணியில் நேற்றிரவில் இருந்து ஈடுபட்டுள்ளனர்.

Related Post

பாரதிராஜாவால் ரிஜக்ட் செய்யப்பட்டு பெரிய ஆளான நட்சத்திரங்கள்..இத்தனை நடிகர்களா?!

Posted by - June 1, 2023 0
இயக்குனர் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றோரை தமிழ் சினிமாவின் முக்கிய தூண்கள் என கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்தவர்கள் இவர்கள் இருவரும்.  …

முதல் நாளிலேயே அடிதூள் வசூல் வேட்டை நடத்தியுள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன்- முழு விவரம்

Posted by - July 15, 2023 0
மாவீரன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-அதிதி ஷங்கர் நடிப்பில் நேற்று ஜுலை 14 வெளியான திரைப்படம் மாவீரன். ரூ. 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் கதை. எல்லாவற்றையும்…

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023 0
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *