ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

231 0

கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில் ஒன்று தான் கூட்டு கறி

இந்த கூட்டு கறியானது கிழங்குகள், சுண்டல், காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. நீங்கள் கேரளாவில் பிரபலமான இந்த கூட்டு கறியை உங்கள் வீட்டிலும் செய்ய நினைக்கிறீர்களா? இந்த கூட்டு கறி சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி | Onam Special: Kerala Kootu Curry Recipe In  Tamil - Tamil BoldSky

உங்களுக்கு ஓணம் ஸ்பெஷல் கேரளா கூட்டு கறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா கூட்டு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சேனைக்கிழங்கு – 1/2 கப்

* வாழைக்காய் – 1/2 கப்

* கருப்பு சுண்டல் – 1/2 கப் (8 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* பூண்டு – 2 பல்

* பச்சை மிளகாய் – 1

* மிளகு – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* கறிவேப்பிலை – சிறிது

வறுப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை:

* முதலில் சேனைக்கிழங்கு மற்றும் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு மற்றும் வாழைக்காயை சேர்த்து, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள கருப்பு சுண்டலை குக்கரில் போட்டு, அதில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காய்கறிகள், சுண்டல் மற்றும் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை தெளித்து, பச்சை வாசனை போக வேக வைத்து இறக்க வேண்டும்.

* பச்சை வாசனை போனதும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் தாளித்ததை காய்கறிகளுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதையும் காய்கறிகளுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரளா கூட்டு கறி தயார்.

Related Post

Sun Tan-ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்..

Posted by - May 17, 2023 0
உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். Sun Tan-ஐ நீக்கி…

கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சிருக்கீங்களா..? சூப்பரான ரெசிபி இதோ

Posted by - March 26, 2024 0
உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால் ஒருமுறை கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் திரும்ப திரும்ப செய்து கொடுக்க சொல்வார்கள். மட்டன்…

முட்டை சமைக்கப் போறீங்களா? இந்த பொருட்களை சேர்த்து சமையுங்க… சுவையோட ஆரோக்கியமும் கிடைக்கும்…!

Posted by - October 16, 2023 0
முட்டைகள் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக உலகம் முழுவதும் உண்ணப்படும் மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவை புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும் மற்றும்…

சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

Posted by - November 14, 2024 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக்…

சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ

Posted by - March 23, 2023 0
மகாலட்சுமி தமிழ் சீரியல் உலகில் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயமான முகமாக இருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *