dmk

கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

67 0

கமல்ஹாசன் திமுக-வை கடந்த தேர்தலில் விமர்சித்துப் பேசியதையும், இந்த தேர்தலில் திமுக-வை புகழ்ந்து பேசுவதையும் ஒப்பிட்டு இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் வியாழக்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக  மிகப்பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலைச் சந்திக்கிறது.

கமல்ஹாசன் முழு ஆதரவு:

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, தேமுதிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என பல கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மற்றொரு கட்சி மக்கள் நீதிமய்யம். கடந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக-விற்கு எதிராக 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமலே திமுக-விற்கு முழு ஆதரவை அளித்துள்ளது.

பல்லக்குத் தூக்குவேன்:

மேலும், சேலத்தில் நேற்று நடந்த திமுக கூட்டணி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் திராவிட பல்லக்கைத் தூக்குவதற்கு என் தோளைக் கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக வந்திருக்கிறேன் என்றும், நான் அமரும் நாற்காலிக்காக வரவில்லை என்றும் பேசினார்.

மேலும், கடந்த தேர்தலில் திமுக-வை மிக கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன் கடந்த தேர்தல் தோல்வி முதல் திமுக-வுடன் இணக்கம் காட்டி வந்தார். பின்னர், விக்ரம் படத்திற்கு பிறகு திமுக-வுடன் நெருக்கம் காட்டியதுடன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பெற்றார். இந்த தேர்தலில் திமுக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டும், சின்னம் விவகாரம் காரணமாக போட்டியிட கமல் மறுத்தது அவரது கட்சியினருக்கே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.

அன்று எதிர்ப்பு, இன்று வரவேற்பு:

மேலும், போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த 30 வேட்பாளர்கள் செலுத்திய பணத்தையும் கட்சி நிதி என்று கூறி கட்சியின் தலைமை திருப்பித் தர மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது மக்கள் நீதிமய்யத்திற்கு பெரும் கறையாகவும் மாறியது.

சமீபகாலமாக திமுக-வைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள்தான் திமுக-வை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். திருமாவளவன், கமல்ஹாசன் என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடந்த தேர்தலில் மாற்று அரசியலை முன்னெடுத்து மக்கள் நீதிமய்ய விளம்பரத்தில் தொலைக்காட்சியை உடைப்பது போன்று நடித்த கமல்ஹாசன், இந்த தேர்தலில் உதயசூரியனுக்காக மிகவும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

நெட்டிசன்கள் விளாசல்:

இதனால், இணையதளவாசிகள் கடந்த தேர்தலில் கமல்ஹாசன் திமுக-வை விமர்சித்துப் பேசியதையும், இந்த தேர்தலில் திமுக-விற்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசி வருவதையும் ஒப்பிட்டு வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.

Related Post

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025 0
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த…
Gemini Generated Image p0wznkp0wznkp0wz

திருச்சியில் விஜய் வேட்பு மனு தாக்கல்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடல் 🔥 தமிழக அரசியல் சூடுபிடிக்குது!”

Posted by - April 2, 2026 0
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,திருச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,ஆதரவாளர்கள் திருச்சியில்…
Generated Image January 23 2026 11 33AM

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி

Posted by - January 23, 2026 0
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
image 6

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…
Generated Image January 23 2026 11 16AM

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *