கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

222 0

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், பாதிக்கப்பட்டவர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்திருக்கக்கூடும் என சந்தேதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு நடவடிக்கை:

பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்துள்ள அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல எஸ்.பி. ஆக இருந்த சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி. ஆக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்.பி. தமிழ்ச்செல்வன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி உள்ளிட்ட 8 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் இரங்கல்:

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், கள்ளச்சாராய குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தாக தெரிவித்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் எனவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Related Post

ch rain

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

Posted by - December 1, 2023 0
ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்… சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால்…

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு

Posted by - February 18, 2025 0
தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல்…

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

Posted by - April 12, 2024 0
திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *