சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

112 0

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பணி மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பான சூழல் உருவானது.
2009 மே 31-ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8370 ரூபாயும், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5200 ரூபாயும் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியம் 3170 ரூபாய் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே வேலை, ஒரே தகுதி இருந்தும், இந்த சம்பள வித்தியாசம் தற்போது 16,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதை களைய வலியுறுத்தி, கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தாங்கள் ஆட்சி அமைக்கும்போது சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.

திமுக ஆட்சிக்கு வந்தும், வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் 2022ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அக்குழு அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களை காவல் துறை கைது செய்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை திமுக அரசு போராட விட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.அதேபோல, ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை மீண்டும், மீண்டும் திமுக அரசு ஏமாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார்.

Related Post

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…
ASDFGH

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *