செல்போன் செயலியில் களம் இறங்கும் விஜய்.. 234 தொகுதிகளுக்கும் குறி… அரசியல் பிளான் என்ன?

191 0

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் அறிமுகம் செய்ய கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக புதன் அல்லது வியாழக்கிழமையில் செயலியை அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கான செயலி மற்றும் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என்றும் பொறுப்பாளர் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

5ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!கண்டுகொள்ளாத தமிழக அரசு…

Posted by - December 30, 2025 0
சம வேலைக்கு சம ஊதியம் கோரி எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு 5-ஆவது நாளாகப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள்.. சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள்…

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

Posted by - November 29, 2022 0
துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி சந்திப்பு. தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக…

முதலில் வந்தது கோழியா…? முட்டையா..? பல ஆண்டு கால புதிருக்கு விடை தேடி கொடுத்த விஞ்ஞானிகள்

Posted by - June 16, 2023 0
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா… சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது. சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *