சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்

83 0

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இத்தனை கால அரசியல் அனுபவங்களை வைத்து, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சைலென்ட்டாக, அதே நேரத்தில் பக்காவாக செய்து வருவதாக தெரிகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, தமிழ்நாட்டில் பாஜக-வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை, பக்காவான பிளானுடன் கச்சிதமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தல் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், தன் வேலையை அவர் திறம்பட செய்து வருகிறாராம். சரி, அப்படி என்ன தான் செய்கிறார்.? பார்க்கலாம்.

தலைவர் ரேஸில் முந்திய நயினார் நாகேந்திரன்

அண்ணாமலைக்குப் பின், பாஜக தமிழ்நாடு தலைவர் யார் என்ற மிகப் பெரிய கேள்விக்கு விடையாக வந்தவர் தான் நயினார் நாகேந்திரன். அண்ணாமலையின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா அல்லது வேறு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற குழப்பம் நிலவி வந்தது.

மறுபுறம், பாஜக-வின் தமிழ்நாடு மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும், தலைவர் ரேஸில் களமிறங்கி, அவரவர்களுக்கு இருந்த செல்வாக்கை வைத்து காய் நகர்த்தி வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2026-ல் சட்டமன்ற தேர்தல் வருவதால், அதற்கான வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயமும் எழுந்தது.

அந்த கூட்டணி அதிமுக உடன் அமைய வேண்டும் என்பதுதான் தலைமையின் விருப்பமாக இருந்தது. ஆனால், அப்போது பாஜக மாநிலத் தலைவராக இருந்து அண்ணாமலை, அதிமுக உடன் மோதல் போக்கில் இருந்து வந்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு அவருக்கு ஏழாம் பொருத்தமாக இருந்தது. இதனால், அதிமுகவிற்கு இணக்கமாக இருக்கும் ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதில், பாஜக மேலிடம் உறுதியாக இருந்தது.

அந்த இடத்தில் தான் நயினாருக்கு அடித்தது ஜாக்பாட். அவரது அரசியல் அனுபவம், முக்கியமாக  ஏற்கனவே அவர் அதிமுகவில் இருந்ததால், அக்கட்சியினர் உடனான நெருக்கம் ஆகியவற்றை மனதில் வைத்து, பாஜக மேலிடம் அவரை தமிழ்நாடு தலைவராக நியமித்தது.

நயினார் மீது எழுந்த விமர்சனங்கள்

பொதுவாக, ஒவ்வொருவரும் அரசியல் செய்வது ஒவ்வொரு விதமாக இருக்கம். சிலர் அதிரடியாக அரசியல் செய்வார்கள். ஆனால் சிலர், அமைதியாக, அதே நேரத்தில் சரியான முறையில் விஷயங்ககை கையாள்வார்கள். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிரடிக்கு பெயர் போனவர். தினமும் ஊடகங்களை சந்திப்பது, ஆவேசமாக பேசுவது என, அவரது அரசியல் பாணி அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

ஆனா மறுபுயம், புதிய தலைவராக வந்த நயினார் நாகேந்திரன், விஷயங்களை மிகவும் மென்மையாக கையாள்கிறார். அரசியலுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், சிஸ்டம் என்று ஒன்று உள்ளது என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. சிஸ்டம் சரியாக இருந்தால், எல்லாம் சரியாக நடக்கும். அதைத் தான் நயினார் தற்போது செய்து வருகிறார்.

பூத் லெவலில் வேலை செய்யும் நயினார் நாகேந்திரன்

எந்த ஒரு கட்சியுமே, அடிப்படையில் வலுவாக இருந்தால் மட்டுமே, ஆழமாக காலூன்ற முடியும். அதற்கு அந்த கட்சி, பூத் லெவலல் வலுவாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை, திமுக, அதிமுக கட்சிகள் கச்சிதமாக செய்து வருவதால் தான், தமிழ்நாடு காலம் காலமாக, மாறி மாறி அவர்கள் கைவசமே இருக்கிறது.

இந்த சூட்சமத்தைத் தான் நயினார் நாகேந்திரன் தற்போது செய்து வருகிறார். அதிமுகவில் அவர் இருந்ததால், பூத் மட்டத்தில் வேலை செய்து கட்சியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதை தற்போது பாஜக-விற்காக அவர் செய்து வருகிறார்.

பூத் கமிட்டிக்களை அமைப்பது மட்டுமல்லாமல், அவர ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று, அங்கு பணியாற்றும் கட்சியினருக்கு அறிவுரைகளையும் வழங்கி, கட்சியை வலுவான பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். இதனால், பாஜக மேலிடத்திற்க அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அனைவருடனும் இணக்கமாக இருக்கும் நயினார்

பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன், சொந்த கட்சியினரிடமும், கூட்டணிக் கட்சிகளுடனும் இணக்கமான போக்கையே கடைபிடித்து வருகிறார். எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல், எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அவரது பாங்கு, கட்சிக்கு நிச்சயம் உதவியாகவே இருக்கும். இதற்கு பெரிய உதாரணமாக, இந்த மாத தொடக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு நயினாரின் வீட்டில் நடந்த தடபுடலான விருந்து உபசரிப்பை கூறலாம்.

நெல்லை மாவட்டத்தி பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமியை தனது வீட்டிற்கு அழைத்து, 109 வகையான உணவுகளுடன், பிரமாண்ட விருந்தளித்து உபசரித்தார் நயினார் நாகேந்திரன். இந்த விருந்தில், பாஜக மற்றும் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாகவே, எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனை தனது பிரசார மேடையில் ஏற்றி மக்களிடையே ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறார்.

கோஷ்டி பூசல் இல்லாத கட்சியாக மாறும் பாஜக

காங்கிரஸ் கட்சியை போலவே பாஜகவிலும் கோஷ்டிகள் உண்டு. ஆனால், அப்படியான எந்த கோஷ்டி பூசலும் வந்துவிடாமல் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பழக்கம் நயினாருக்கு இருப்பதால், கோஷ்டி பூசல் இல்லாத தமிழக கட்சியாக இப்போது பாஜக மாறி வருகிறது.

அதே நேரத்தில் கட்சியில் இணைந்த குஷ்பு உள்ளிட்ட பலருக்கு துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை நயினார் சமீபத்தில் வழங்கினார். இது புதிய நிர்வாகிகளுக்கும் கட்சி பணி செய்ய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, அவரிடம் குறைகள், கோரிக்கைகள் என எந்த கட்சி நிர்வாகி, பாஜக தொண்டர் வந்தாலும் அதனை அமைதியாக கேட்டு அந்த குறையை கடைசி வரை பாலோ செய்து நயினார் தீர்த்து வைத்து வருகிறார். இதுவரை மனுக்களை மட்டுமே வாங்கிய பாஜக தலைவர்களை மட்டுமே பார்த்து வந்த தமிழக பாஜகவினர், நயினாரை வராது வந்த மாமனியாய் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அவருடைய இப்படியான செயல்பாடுகளும், கள அரசியல், எதார்த்தம் புரிந்தவராக அவர் இருப்பதாலும், ஏற்கனவே நடந்த தவறுகளை திருத்தியும், புதிய தவறுகள் நடப்பதற்கு முன்னரே தடுத்தும், அவர் ஆடும் ஆட்டங்கள் பாஜகவினருக்கு புதுத் தெம்பை அளித்திருக்கிறது.

அதிமுக கூட்டணியோடு மீண்டும் இணக்கமாக செல்ல முடியுமா ? என்று இருந்த கேள்வி இப்போது இல்லை. அதிமுகவினரும் பாஜகவினரும் களத்தில் ஒன்றாக நின்று வேலை பார்க்கின்றார்கள். அவர்களுக்கு பொது அரசியல் எதிரி திமுகதான் என்பதை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு காரணம், நயினார் நாகேந்திரன் என்ற மனிதர் பாஜகவின் தலைவர் ஆனதுதான் என சொல்கிறார்கள் பாஜகவின் முக்கிய தளகர்த்தர்கள்.

இப்படி, அமைப்பு ரீதியிலும், அரவணைக்கும் பாணியிலும் சைலென்ட்டாக சம்பவம் செய்து வருகிறார் நயினார் நாகேந்திரன். இவரது தலைமையின் கீழ், பாஜக தமிழ்நாட்டில் மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை அக்கட்சியினரிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. இவரை மாநிலத் தலைவராக பாஜக நியமித்தது வீண் போகாது என்றே கூறலாம்.

 

Related Post

image 6

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…
Gemini Generated Image 80ljk280ljk280lj

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…
Gemini Generated Image gzfucmgzfucmgzfu

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

Posted by - April 9, 2026 0
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற…
election e1773643444860

இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

Posted by - March 16, 2026 0
TVK Vijay: டெல்லியில் சிபிஐ விசாரணையின் மூன்றாவது கட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். TVK Vijay: கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ…

விஜய் அதிரடி சவால்: நேருக்கு நேர் சந்திக்க வாருங்கள் – நாகையில் விஜய் பேசியது என்ன?

Posted by - September 20, 2025 0
“மக்களே நான் உங்களிடம் பேசக்கூடாதா, வரக்கூடாதா, குறைகளை கேட்க கூடாதா, உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடாதா நீங்களே சொல்லுங்கள்” – விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *