ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

220 0

ராஞ்சி:

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன. இங்கு நிறுத்தப்பட்டிருந்த சில பஸ்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு | Fire breaks out  at ranchi bus stop 8 buses gutted blaze in jharkhand

இதில் 4 பஸ்கள் முற்றிலும் சேதமடைந்தன. மற்றொரு பஸ் பாதியளவு சேதம் அடைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சுமார் 100 மீ. தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 4 பஸ்கள் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த பஸ்கள் முற்றிலும் நாசமாயின. தகவலறிந்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பஸ்கள் தீப்பிடித்தபோது அவற்றில் பயணிகள் யாரும் இல்லாததால் இச்சம்பவத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 8 பஸ்கள் முற்றிலும் தீக்கிரையான சம்பவம் ராஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தின் பின்னணியில் சதி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

Related Post

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - April 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

Posted by - April 8, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28).…

தினசரி பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு

Posted by - March 8, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ந்தேதி 324 ஆக…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *