திருப்பி அடித்த சீனா.. வெந்த புண்ணில் பாய்ந்த வேல்.. தாங்குவாரா ட்ரம்ப்..?

190 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனா அதே அளவு வரியை திருப்பி விதித்துள்ளது.

அமெரிக்கா விதித்த 34% வரியைத் தொடர்ந்து, அதே அளவு வரியை திருப்பி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. அதோடு சேர்த்து, சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் என்று சொல்லும் வகையில், ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ள அமெரிக்காவிற்கு, இது மேலும் சிக்கலை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது.

பரஸ்பர வரிகளை விதித்து அதிரடி காட்டிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவில் விதிக்கப்படும் வரிகளைவிட, மற்ற நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதிப்பதாகவும், இத்தனை காலமும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதை பேச்சோடு நிறுத்தாமல், செயலிலும் காட்டிய ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி, அதாவது, எந்தெந்த நாடுகள் அமெரிக்காவிற்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் விதிக்கும் என கூறினார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பரஸ்பர வரிகளை விதித்த ட்ரம்ப், மற்ற நாடுகளுக்கு அதே அளவில் வரி விதிக்காமல், நட்பின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான தள்ளுபடியை கொடுத்து வரிகளை விதித்தார். அதன்படி, இந்தியாவிற்கு 26% வரியை விதித்த ட்ரம்ப், சீனாவிற்கு 34% வரியை போட்டுத் தாக்கினார்.

ட்ரம்ப் வரிகளை அறிவித்த அன்றிலிருந்து, உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் பல்வேறு பங்குச் சந்தைகள் பின்னடைவை சந்தித்து, ட்ரில்லியன் கணக்கில் வீழ்ச்சிகளை அமெரிக்கா சந்தித்து வருகிறது. வரிகளை அறிவித்த அதிபர் ட்ரம்ப்பும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.

சீனா கொடுத்த பதிலடி – தாங்குவாரா ட்ரம்ப்.?

இப்படிப்பட்ட சூழலில், வர்த்தகப் போரிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவிற்கு அதே 34% வரியை அனைத்து பொருட்களின் மீதும் விதித்து பதிலடி கொடுத்துள்ளது. அதோடு கூடுதலாக, பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

சீனாவின் வர்த்தக அமைச்சகம், 11 அமெரிக்க நிறுவனங்களை, நம்பமுடியாத நிறுவனங்க என பட்டியலிட்டு, அந்நிறுவனங்கள் சீனாவிலும், சீன நிறுவனங்களோடும் வர்த்தகம் செய்வதற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. மேலும், சீனாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில அறிய பூமிக் கூறுகளின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த, உரிமம் வழங்கும் முறையை கொண்டுவந்துள்ளது. இந்த பூமிக் கூறுகள், மின்சார கார்கள் முதல் ஸ்மார்ட் குண்டுகள் தயாரிப்பு வரை பயன்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உலக அளவில் போட்டித்தன்மையுடன் இருக்கும் சில உற்பத்தி வகைகளான அமெரிக்க மருத்துவ இமேஜிங் உபகரணங்களின் ஏற்றுமதி தொடர்பான இரண்டு விசாரணையையும் தொடங்குவதாக சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 5 பெரிய விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சிக்கன் இறக்குமதி செய்வதை நிறுத்து உள்ளதாக சீன சுங்கத்துறை பொது நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல், இவை 5 இல்லாமல், 6-வதாக ஒரு நிறுவனத்திடமிருந்து அரிசி இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சீனா அமெரிக்காவிடமிருந்து பொருட்கள் வாங்குவதைவிட, அதிக அளவில் பொருட்களை விற்பனை தான் செய்கிறது. அதனால், சீனாவை விட, அமெரிக்காவிற்கு குறைவான பாதிப்புகளே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், தற்போது விமர்சனங்களை சந்தித்து வரும் ட்ரம்ப்பிற்கு இது சற்று பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாகத்தான் இருக்கும்.

Related Post

பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

Posted by - November 22, 2025 0
ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்…

சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா – உறவு எப்படி?

Posted by - May 15, 2025 0
எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன், இந்தியாவின் உறவு எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இந்தியாவும்.. அண்டை நாடுகளும்.. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

இன்று உலக கிறிஸ்துமஸ் திருநாள்- ஒரு பார்வை

Posted by - December 25, 2023 0
உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.…

அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

Posted by - June 18, 2025 0
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின்…

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

Posted by - September 6, 2023 0
டோக்கியோ: இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *