நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

253 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராஜன் சுனந்தா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்களும் முடக்கப்பட்டுள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.முன்னதாக தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இருப்பினும் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Post

தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Posted by - October 18, 2025 0
வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. தீபாவளி திங்களன்று…

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் – பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..

Posted by - March 15, 2026 0
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசிரியர்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் என்ற கெட்டப்பெயர் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் திமுக ஆட்சி…

பாமக-வில் பறிபோகும் அன்புமணி பதவி? அதிகாரத்தை இவரிடமா தரப்போகிறார் ராமதாஸ்?

Posted by - August 12, 2025 0
ராமதாஸ் தலைமையில் வரும் 17ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக பல முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில்…

“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

Posted by - March 16, 2023 0
 நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *