வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் – 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

261 0

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ சாஹு. இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் - 25 முறை மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற  தந்தை | man attacked his daughter with a knife over a trivial issue, leading  to the death of his 19 year old ...

அதற்கு அவர், வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும் என அனுமதி மறுத்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமானுஜ சாஹு, வீட்டின் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.

தடுக்க வந்த குடும்பத்தினரையும் கத்தியால் தாக்கியிருக்கிறார். இதில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் கத்திக்காயம் ஏற்பட்டிருக்கிறது. மகளையும், மனைவியையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். ஆத்திரத்தில் மகளை மட்டும் ஏறத்தாழ 25 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த தந்தை மகளை 25 முறை கத்தியால் குத்திக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

tata cars

டாடா சியாரால EV வந்தா நல்லா இருக்கும்னு வெயிட் பண்றீங்களா.?

Posted by - February 14, 2026 0
புதிய டாடா சியரா EV, வலுவான தோற்றம், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் மற்றும் நம்பகமான பிராண் பெயரைக் கொண்ட மின்சார SUV-யைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு…

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Posted by - April 12, 2024 0
புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர்…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Posted by - December 13, 2023 0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *