பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

305 0

பெங்களூரு :

பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில் ஒரு பழைய குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) இருந்தது. அதனை விற்று விட்டு புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டில் உள்ள அந்த குளிர்பதன பெட்டியை புகைப்படம் எடுத்து, அது விற்பனைக்கு இருப்பதாக கூறி ஆன்லைன் நிறுவனமான ‘ஓ.எல்.எக்ஸ்.’ என்ற இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.பெங்களூருவில் ஆன்லைனில் 'பிரிட்ஜை' விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த  என்ஜினீயர் | engineer tried to sell fridge Online Fraud lost Rs 1 lakh in  Bengaluru

இந்த நிலையில், பூர்ண சந்திரராவை தொடர்பு கொண்டு ஒருநபர் பேசினார். அப்போது அவர் தனது பெயரை அமித் சர்மா என்று கூறிக் கொண்டார். மேலும் தான் ஒரு ராணுவ வீரர் என்றும், உங்களது குளிர்பதன பெட்டியை வாங்க தான் முடிவு செய்திருப்பதாகவும் பூர்ண சந்திரராவிடம் அமித் சர்மா கூறினார். இதனை அவரும் நம்பினார்.

மேலும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அதிக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது, தான் அனுப்பும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உங்களது வங்கி கணக்கு தகவல்களை தெரிவித்தால், அதன் மூலமாகவே பணம் அனுப்புவதாக கூறினார். இதையடுத்து, அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார். அப்போது அவரது கணக்கில் இருந்த ரூ.99 ஆயிரத்தையும் எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதனால் பூர்ண சந்திரராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

Related Post

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

இனி சைலண்ட் ரூட் செட் ஆகாது – தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை, கூட்டாளிகளை பலப்படுத்த முடிவு

Posted by - May 16, 2025 0
ஆஃப்கானிஸ்தான் தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்…

வன்முறை நீடித்து வரும் நிலையில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர்கள்

Posted by - July 25, 2023 0
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு…

மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர் ரூ.10 லட்சம்வரை கடனுதவி அறிவிப்பு!

Posted by - August 17, 2024 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை…

அடுத்த பிரச்சனை.. Jio, Airtel, Vi 10% விலை உயர்வு.. ரூ.299 பிளான் ரூ.329.. ரூ.349 பிளான் ரூ.384 ஆகுமா.. எப்போ?

Posted by - November 6, 2025 0
இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே – பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *