Generated Image November 06 2025 10 59AM

அடுத்த பிரச்சனை.. Jio, Airtel, Vi 10% விலை உயர்வு.. ரூ.299 பிளான் ரூ.329.. ரூ.349 பிளான் ரூ.384 ஆகுமா.. எப்போ?

205 0

இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது மற்றொரு சுற்று கட்டண திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே – பிஎஸ்என்எல் (BSNL) உட்பட அனைத்துமே, வேலிடிட்டியை குறைப்பது, நன்மைகளை குறைப்பது போன்றவைகளின் வழியாக மறைமுக விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea – Vi) ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் வரும் மாதங்களில் தத்தம் மொபைல் டேட்டா திட்டங்களின் விலைகளை சுமார் 10% அதிகரிக்கக்கூடும் (tariff hike) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்.இன் தளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, புரோக்கரேஜ் நிறுவனமான ஆக்சிஸ் கேபிடல் (Axis Capital) மற்றும் ஆய்வாளர் கௌரவ் மல்ஹோத்ரா (Gaurav Malhotra) ஆகியோர்கள் – டிசம்பர் 2025 முதல் ஜூன் 2026 க்குள் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என்று கணித்துள்ளனர். கம்யூனிகேஷன்ஸ் டுடேவின் (Communications Today) அறிக்கையின் படி, ஜேபி மோர்கனின் (JP Morgan) கூற்றுப்படி, ஜியோவின் ஐபிஓவுக்கு முன் ஒரு மூலோபாய நடவடிக்கையாக 15% வரை சாத்தியமான விலை உயர்வு அமலுக்கு வரலாம். மேலும் கடந்த கால போக்குகளை கருத்தில் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோவை தொடர்ந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை உயர்வை பின்பற்றும். இது செயல்படுத்தப்பட்டால், 2024 க்கு பிறகு, டெலிகாம் சந்தைக்கு வரும் முதல் நேரடி விலை உயர்வாக இது இருக்கும். மேலும் டெலிகாம் நிறுவனங்களானது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) அதிகரிப்பதற்கான திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், மறு மதிப்பீடு செய்யும் நேரத்தில் இந்த விலை உயர்வு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#airtel #vi #vodafonin #bsnl #jio

Related Post

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை- சாலைகளில் மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2023 0
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம்…

GENERAL NEWS“40 நாட்கள், 8 கட்ட தரையிறக்கம்! சந்திரயான் 3ன் நிலவு பயணம்! தரையிறங்கும் Vikram Lander!”

Posted by - August 23, 2023 0
சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன.…

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண் கொலை- காதலன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

Posted by - June 30, 2023 0
திருப்பதி: சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக…

புதிதாக 126 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 74 ஆக இருந்தது. நேற்று 102 ஆக உயர்ந்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி…

பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை….

Posted by - April 6, 2023 0
பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். சென்னை: பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *