Gemini Generated Image gzfucmgzfucmgzfu

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

121 0

மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற வைத்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் மேற்கொண்ட பரப்புரை எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.

நெல்லைக்கு வருகை தந்த விஜய்

ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அவர் நேற்று தென் மாவட்ட கோட்டையாக அறியப்படும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பரப்புரை மற்றும் ரோடு ஷோ சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு தவெக தரப்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து ரோடு ஷோ செல்லும் வாகனத்தில் அவர் அங்கிருந்து பரப்புரை நடக்கும் இடமான கேடிசி நகர் ரவுண்டானா பகுதிக்கு சென்றார். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறமும் மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு சென்ற விஜய் அங்கு சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார்.

திணறிய திருநெல்வேலி

இதன்பின்னர் அங்கிருந்து ரோடு ஷோ சென்ற விஜய் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் வரை நெல்லை மாநகரத்துக்குள் பயணப்பட்டார். அவ்வளவு தான் திருநெல்வேலி நகரமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கண்ணாடி, கிட்டார், டெடி பியர் பொம்மை, வீர வாள், கார், போட்டோ ஃப்ரேம், குளிர்பான பாட்டில்கள் என அவருக்கு வழியெங்கும் மக்கள் கிஃப்ட்களை வாரி வழங்கினர். இதனால் விஜய் நெகிழ்ந்து போனார்.

மிரட்டி விட்ட தூத்துக்குடி மக்கள்

இதனைத் தொடர்ந்து விஜய் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அவர் பரப்புரை செய்யாமல் ரோடு ஷோ மட்டும் சென்றார். ஆனால் அதற்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மிரண்டு போகும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை இருந்தது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் இப்படி ஒரு கூட்டத்தை எந்தவொரு அரசியல் கட்சியாலும் கூட்ட முடியாது என தவெகவினர் சவால் விட்டு வருகின்றனர்.

பிளான் போட்டது இவரா?

இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விஜய்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கான காரணங்களின் பின்னால் அக்கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஜெயலலிதா காலக்கட்டத்தில் செங்கோட்டையன்  தான் தேர்தல் பரப்புரைக்கான திட்டமிடுதலை மேற்கொள்வார். அப்படியான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பே நெல்லை வந்த செங்கோட்டையன் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் கூட முழுமையாக களப்பணியாற்றியுள்ளார். அவரின் திட்டமிடல் மற்றும் விஜய் மீதிருக்கும் மக்கள் அன்பு இணைந்தும் சேர்ந்து இப்படி ஒரு மாஸ் கூட்டம் சேர காரணமாக அமைந்துள்ளது என தவெக தரப்பில் தெரிய வந்துள்ளது.

Related Post

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…
Generated Image February 19 2026 8 05PM

அதிமுக+ Vs தவெக: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது யாருக்கு அதிக பாதிப்பு?

Posted by - February 19, 2026 0
ஒருவழியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது தேமுதிக. பிரேமலதா எடுத்த இந்த அதிரடி முடிவால், அதிமுக கூட்டணிக்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்ன? தவெகவின் மனநிலை…
sasikala

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…
tvk viajy

எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

Posted by - April 20, 2026 0
தவெக தலைவர் விஜய் தனது திருச்சி கிழக்கு தேர்தல் பரப்புரையின் போது தேவாலயம், தர்கா மற்றும் கோவிலில் வழிபாடு செய்தார். தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *