tvk vijay

TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?

139 0

‘இந்தியா டு டே நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் விஜய் 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும், இது திரைப்படத்திலும் கனவிலுமே நடக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்’

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பல நிறுவன கருத்துக் கணிப்புகள் திமுகவே மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், டைம்ஸ் நவ், வோட் வைஃப் ஆகிய நிறுவன கருத்துக் கணிப்புகள் மட்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.

வெளியான அதிர்ச்சி முடிவுகள்

அதே நேரத்தில், மற்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் எல்லாம் விஜய் கட்சிக்கு அதிகப்பட்சம் 24 இடங்கள் வரை கொடுத்த நிலையில், இந்தியா டு டே கருத்துக் கணிப்பு மட்டும் வித்தியாசமாக தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளையெல்லாம் தாண்டி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதில், தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் ஆட்சி அமைப்பாரா?

ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில், இந்தியா டு டே கருத்துக் கணிப்பு அடிப்படையில் அதிகப்பட்சம் விஜய் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனல், 98 முதல் என தொடங்கியுள்ளதால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான அந்த மேஜிக் எண்ணான 118 இடங்களை விஜய் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது நடக்கவே நடக்காது – அரசியல் விமர்சகர்கள்

ஆனால், இந்தியா டூ டே நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டவை ? எத்தனை தொகுதிகளில் எடுக்கப்பட்டவை ? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் அதோடு, கட்சியை தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் இவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் செல்லுமிடமெல்லாம் அவரை பார்க்கவும், சந்திக்கவும் பெரும் கூட்டம் வருவதை வைத்தே இப்படியான கணிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நடைமுறையில் விஜய் 90 தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற சாத்தியமே இல்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

Posted by - அக்டோபர் 17, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற…
Generated Image February 21 2026 10 27AM

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - பிப்ரவரி 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…
DMK 2

MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?

Posted by - ஜூலை 4, 2026 0
தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசனை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது விஜய் தலைமையிலான…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - செப்டம்பர் 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…
Gemini Generated Image pkuqg2pkuqg2pkuq

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - ஏப்ரல் 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன