மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

223 0

உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா செய்தும் சாப்பிட்டிருக்கலாம்.

ஆனால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் தெரியுமா? இந்த மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த புட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் மீல் மேக்கர் புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் மீல் மேக்கர் புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா  அள்ளும்... | Chettinad Meal Maker Puttu Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் – 20

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 2 (இரு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* எண்ணெய் – 4 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

மசாலா அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 1

* கிராம்பு – 2

* சோம்பு – 2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு சேர்த்து, 2 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, 2 நொடிகள் ஒருமுறை அரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில், தேங்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது உப்பு தூவி, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.

* அடுத்து அரைத்த மீல் மேக்கரை சேர்த்து, மசாலாவுடன் மீல் மேக்கர் ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் மீல் மேக்கர் புட்டு தயார்.

குறிப்பு:

* இந்த புட்டு செய்தவுடன், இறுதியில் 2 முட்டைகளை உடைத்து, அத்துடன் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து, அதையும் சேர்த்து நன்கு கிளறினால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

Related Post

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா

Posted by - September 19, 2023 0
மாரிமுத்து தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து. இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்தம்மா ஏய்…

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. திடீர்னு கருப்பாக மாறும் டிஸ்பிளே.. கதறும் கஸ்டமர்ஸ்!

Posted by - March 21, 2024 0
ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை.. உண்மையாகவே நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியதும், மக்கள் “அடித்து பிடித்து” ஆர்டர் போட்டனர். நத்திங்கின் கூற்றுப்படி 1 மணி…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?- சாய் காயத்ரியின் பதில்

Posted by - March 10, 2023 0
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பத்தை விவரிக்கும் ஒரு கதையாக தொடர் ஒளிபரப்பாகிறது. சில சமயம்…

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

Posted by - February 5, 2026 0
சன் டிவி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *