ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

243 0

அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில், தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த டீசரும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கூலி படத்தில் அனுமதியின்றி, தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

 

அதில், கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்திலும் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

எனவே, கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.அண்மையில், இளையராஜா இசை குறித்து வைரமுத்து விமர்சித்த நிலையில், அதற்கு கங்கை அமரன் எதிர்வினையாற்றி இருந்தார். இத்தகைய சூழலில், இளையராஜா தனது இசை குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

kambu thinai

கம்பு, கேழ்வரகு உடம்புக்கு நல்லதுதான்… இந்த நேரத்துல சாப்பிட்டா சிக்கல்தான்…

Posted by - May 14, 2026 0
சிறுதானியங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், சிலருக்கு தூக்கமின்மை அல்லது உடல் அசௌகரியம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு…

சப்பாத்திக்கு சூப்பரான பேபி கார்ன் மசாலா

Posted by - March 16, 2023 0
பேபி கார்னில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 30 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள் பேபி கார்ன் – 1 பாக்கெட் பிரஷ்…

கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

Posted by - March 27, 2023 0
பொதுவாக திருமணம் என்றாலே வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமாகும். ஏனெனில் வயதை வைத்து தான் ஒருவரின் பக்குவமான செயல்முறைகள் காணப்படும். அதே போன்று திருமண ஜோடிகளின் வயது…

விவாகரத்திற்கு பிறகு புதிய காதலருடன் நடிகை எமி ஜாக்சன்- வெளியிட்ட மோசமான புகைப்படம்

Posted by - February 16, 2023 0
எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த ஹாலிவுட் நாயகி தான் எமி ஜாக்சன். அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து…

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *