CHT

விஜய்க்கு விசில் சின்னம்..

103 0

முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம்.

விசில் சின்னம்:

திமுக-வின் உதயசூரியன் சின்னம், அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டியாக இந்த தேர்தலில் களமிறங்கும் தவெக எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளது? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-விற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தவெக அனுப்பிய 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் விசில் சின்னம் முதன்மையானதாக இருந்ததாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் தேதி அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசில் சின்னம் இன்று தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சின்னத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் தவெக-வினரை தீவிரமாக செயல்பட தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னம்தான் ஆறுதல்:

திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தியுள்ள நிலையில், தவெக-வுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. திமுக மற்றும் அதிமுக வலுவான கூட்டணியை எதிர்த்து, தனியாக களமிறங்கும் நிலையிலே தற்போது வரை தவெக உள்ளது.

கரூர் சம்பவம், ஜனநாயகன் நெருக்கடி என பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் தவெக-விற்கு தற்போது இந்த விசில் சின்னம் மட்டுமே மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது.

குஷியில் தவெக:

இந்த சின்னம் கிடைத்தது தவெக-விற்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் நடித்த பிகில் மற்றும் தி கோட் படங்களில் அவர் விசிலுடன் நடித்திருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும் விசில் சின்னம் கிடைத்தால் அதை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் எளிது என்றும் தவெக-வினர் கருதுகின்றனர்.

இணையத்தில் தற்போது முதலே விசில் சின்னம் பேசுபொருளாக மாறியுள்ளது. உதயசூரியன் – இரட்டை இலைக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த சின்னம் இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விஜய்யின் தி கோட் படத்தில் விசில் போடு என்ற பாடலும் இடம்பெற்றிருக்கும்.

 

Related Post

w

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா? – அஜித் சொன்னதாக வெளியான தகவல்.. உண்மை என்ன?

Posted by - April 23, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா என அஜித்திடம் கேள்வியெழுப்பட்டதாகவும், அதற்கு அவர் தேவையில்லை என சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மாற்றம்…

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

Posted by - December 15, 2025 0
திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில்…
tn bjp

தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்

Posted by - March 25, 2026 0
 கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை அதிமுக…
w 2

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - March 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *