Generated Image November 27 2025 10 14AM

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

139 0

எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில் பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார்.

அதிமுகவிலிருந்து ஏற்கெனவே பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன்னில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்த நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

Related Post

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - September 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

Posted by - August 22, 2025 0
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று…
image 6

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…
f

tvk vijay:விழி கவரும் அரசியல் பரபரப்பு! Election day..

Posted by - April 23, 2026 0
நடிகர் மற்றும் Vijay தனது கட்சியை தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட அரசியல் பரபரப்பு, தேர்தல் நாளிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களில், டிவிகே தலைவர்…
Generated Image November 22 2025 11 12AM

‘TVK’ விஜய் – தேமுதிகவின் உண்மையான பயம்?

Posted by - November 22, 2025 0
தேமுதிகவின் ‘மெகா’ பேரமும்… எதார்த்தத்தை உணர்த்திய ஸ்டாலினும்! – ஒரு அரசியல் பார்வை ​தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்பதற்கான முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *