vijay 3

திருச்சியில் பின்னடையும் விஜய்.! பெரம்பூரில் முன்னிலை.! லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

90 0

Tamil Nadu Election Results 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் முன்னிலையிலும், திருச்சி கிழக்கு தொகுதியில் பின்னடைவையும் சந்தித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தவெக சார்பில் போட்டியிட்ட விஜய் முன்னிலையில் உள்ளாரா என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழக அரசியல் களத்தில் திமுக – அதிமுகவிற்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளார் நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கிய விஜய், யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை எதிர்கொண்டார். அந்த வகையில் தேர்தல் வாக்குப்பதிவின் போது விஜய்க்கு இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் திமுக- அதிமுகவை வீழ்த்தி விஜய் ஆட்சி அமைப்பார் என கருத்து கணிப்பும் வெளியானது. இதனால் குழப்பமான நிலை ஏற்பட்டது. யாராலும் தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முன்னிலையில் விஜய்

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தபால் வாக்கில் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரும், 3ஆம் இடத்தில் பாமக வேட்பாளர் திலகபாமாகவும் உள்ளனர்.இதே போல திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் இனிக்கோ இருதயராஜ் தபால் வாக்கில் முன்னிலையில் உள்ளார்.

 

Related Post

மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு!

Posted by - August 21, 2025 0
மதுரை: மதுரையில் இன்று தவெக மாநாடு (TVK Maanadu Madurai) நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் விஜய் மாலை 6 மணியளவில் பேசுவார் என்று…

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

Posted by - March 27, 2026 0
சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…
vv e1773726199570

முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்…

Posted by - March 17, 2026 0
“பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக…
SSS

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

Posted by - April 13, 2026 0
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *