வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

195 0

தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்.26 27ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Post

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

Posted by - December 2, 2023 0
சென்னை: மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? 2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *