ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்

201 0

அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது என்றும் ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் அண்ணா பல்கலைக்கழக வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே புகுந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி, வெறும் 5 மாதங்களில் விசாரணை முற்றிலுமாக முடிக்கப்பட்டது. அதன் முடிவில், ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டு இருந்த 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் 28ம் தேதி நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு:

அதேநேரம், குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜுன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி, இன்று ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட 11 குற்றப்பிரிவுகளுக்கு தனித்தனியாக 11 தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தண்டனை குறைப்பு இன்றி ஏக காலத்திற்கும் சிறை தண்டனை அனுபவிக்கவும் என்பதோடு, 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரனின் தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கின் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

பஞ்ச் பேசிய இபிஎஸ்:

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார்? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது.

அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!” என பதிவிட்டுள்ளார்.

Related Post

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் கடன் அதிகரிப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - February 19, 2024 0
சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்த கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, ஒரு…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

Posted by - December 16, 2022 0
உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மட்டுமல்லாது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார். இளைஞர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *