ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்…

251 0

ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி...!!

சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சாலிசிலிக் அமிலமானது முகப்பருக்களை நீக்க உதவுகிறது. இறந்த செல்கள் முகத்தில் தேங்கியிருக்கும் போது முகத்தின் பளபளப்பு குறைகிறது. இந்த இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கொலாஜன் உற்பத்தி குறைவால் சருமத்தில் சுருக்கங்களும் இளவயதில் முதுமை தோற்றமும் உண்டாகிறது.

இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது. அழகான நிறத்தை கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி சத்து நிறைந்தது. இவற்றில் இருக்கும் ஒமேகா 3 கூடுதலாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி, தயிர், தேன் மூன்றையும் சமஅளவில் எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும், இவை முகப்பருவை குறைப்பதோடு முகத்தையும் பொலிவாக்க உதவும். வாரம் ஒருமுறை இந்த பேக் போடுவதன் மூலம் முகப்பருக்களை விரைவாக குறைக்க முடியும்.

ஸ்ட்ராபெர்ரி மசித்தது 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன், பாலேடு 1 டீஸ்பூன் எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து குழைத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவுங்கள். பிறகு இலேசாக மசாஜ் செய்து விடவும்.

20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். கற்றாழை ஜெல் முகத்தில் இருக்கும் வறட்சியை தடுத்து எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கற்றாழை பயன்படுத்துவதால் அவை சருமத்துளைகளை அடைக்காமல் முகத்தை சுத்தம் செய்து வெளியேறும்.

சருமத்தில் கரும்புள்ளிகள். பருக்களால் வடு போன்றவற்றையும் மறைய செய்யக்கூடியது. இதனோடு ஸ்ட்ராபெர்ரி கலந்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியை மசித்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை காத்திருந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவினால் எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.இது அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு சருமத்தையும் சுத்தம் செய்து இயற்கை ப்ளீச் போல் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

Related Post

தோசை சிவந்து மொறுமொறுனு வரணுமா..? இந்த ஒரு பொருளை மாவில் சேருங்க.!

Posted by - November 22, 2025 0
தோசை ஆனது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே மொறுமொறுப்பான தோசை செய்ய விரும்பினால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.எல்லா வயதினரும் தோசை சாப்பிடுவதை…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியாவும் பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் பங்கேற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Posted by - September 14, 2023 0
பிக் பாஸ் சீசன் 7 விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து  கொள்ளும் போட்டியாளர்கள் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் டாக் ஆஃப் தி டவுன்.…

தனது ஹீரோவுடன் துபாயில் வலம்வரும் வெங்கட்பிரபு.. யாரா இருக்கும்..?

Posted by - April 28, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி…

குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Posted by - July 31, 2023 0
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *