“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

262 0

25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.

அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படும். குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பம் உச்சத்தை தொடும்.

அந்த வகையில் இந்தாண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவாகியது.இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அக்னி நட்சத்திரம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. கோடை மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

Posted by - May 5, 2025 0
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - April 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

தொகுதி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் ஒரு வார்ததை கூட பேசாத திமுக எம்.பி.க்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 10, 2024 0
வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை…
ss

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - March 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

பாத்ரூம்-ல் எட்டி பார்த்த அமுதவானன் !

Posted by - November 23, 2022 0
பிக்பாஸ்- 6 பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்-6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *