அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

404 0

சென்னை:

நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.

மலைப்பகுதிகளில் காணப்படும் மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை இதுவாகும்.. இதன் மருத்துவ குணத்தை அறிந்துகொண்டதால்தான், நம்முடைய முன்னோர்கள் அமுக்கரா கிழங்கை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

கசப்புத்தன்மை:

கசப்புத்தன்மை வாய்ந்த இந்த அமுக்கிரா கிழங்கை, சுத்தம் செய்து பவுடராக இடித்து வைத்து கொண்டால் பெரும் பலனை அடையலாம்.. நரம்புதளர்ச்சி பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பொடி பேருதவி புரிகிறது.அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான்  கிழங்கு பொடி.. செம மூலிகை | Do you know the Health Benefits in Amukkura  Kizhangu and ...

பசும்பாலில், இந்த பொடியை சேர்த்து, கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால், எலும்பு தேய்மானம், நரம்பு தளர்ச்சி உட்பட, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். உடலுள்ள பலவீனங்களை போக்கி பலத்தை தரக்கூடியது இந்த கிழங்கு. இந்த பொடியை காலை, மாலை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்..

மாதவிடாய்:

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால், அல்லது தைராய்டு பிரச்சனை இருந்தால் அமுக்கிரா கிழங்கு பொடி தீர்வு தருகிறது. பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை இருந்தாலோ அல்லது ஆண்மை குறைபாடு இருந்தாலோ அதற்கும் இந்த பொடி உதவுகிறது. விந்துக்களை பெருக்கும் தன்மை கொண்டது இந்த கிழங்கு..

இந்த பொடியை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பார்கள்.. ஆண்களுக்கு இளமையிலேயே தலைவழுக்கை உட்பட பலவிதமான பிரச்சனைகளுக்கும் இந்த பொடியை வைத்தே நிவாரணம் தேடி கொள்ளலாம்.. அதேபோல, இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் பசியின்மை மெல்ல குறையும்.

அமுக்கிரா கிழங்கு:

அமுக்கரா கிழங்கில், எச்ஐவி என்ற கொடிய நோய்க்குகூட மருந்து உள்ளதாம்.. இடுப்பு வலி அதிகமாக இருந்தால், அமுக்கிரா கிழங்கை பச்சையாகவே எடுத்து, பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வைத்து, பற்றுபோல போடலாம். அல்லது உடலில் வீக்கங்கள் அதிகமாக இருந்தால், இந்த கிழங்குடன், சிறிது சுக்கு சேர்த்து அரைத்து, பற்று போல போடலாம்…

உடல் எடை குறையவும் இந்த கிழங்கின் பொடியை பயன்படுத்தலாம்.. 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் என்கிறார்கள்.. ஆனால், இதுபோன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Related Post

Generated Image November 04 2025 4 29PM

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

Posted by - November 4, 2025 0
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து …

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Posted by - February 14, 2024 0
அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி…

வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் – சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை…

நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்ற முன்னணி தமிழ் ஹீரோ! யார் பாருங்க

Posted by - December 3, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகை. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் நுழைந்து இருக்கிறார். பாலிவுட்டில் நுழைந்தது…

கும்பகோணம் சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?

Posted by - October 8, 2025 0
சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?  சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *