அதிமுகவுக்கு நயினார்… ஓபிஎஸ் – தினகரனுக்கு அண்ணாமலை!

136 0

அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான அண்ணாமலை, இவர்கள் இருவரையும் வைத்து என்னவோ திட்டம் தீட்டுகிறார் என்பதால் பழனிசாமி இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கோபத்தில் இருக்கிறார்.

அதேசமயம், அண்ணாமலையை வைத்து, தினகரனும் ஓபிஎஸ்ஸும் வேறெந்த திசையிலும் ஊடுபாய்ந்து விடாமல் இருக்க அணைபோட்டு வருகிறார் அமித் ஷா. அவரைப் பொறுத்தவரை பழனிசாமியை சாந்தப்படுத்த நயினார் நாகேந்திரனையும் ஓபிஎஸ், தினகரனுக்கு அணைகட்ட அண்ணாமலையையும் அழகாகப் பயன்படுத்தி வருகிறார்.

தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அன்றாடச் செய்திகளில் அடிபடுவதை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அண்ணாமலை. தேர்தல் நெருங்குவதால் இப்போது மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்திப்பது, கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ஆளும் கட்சிக்கு எதிராக அனல் கக்கும் வசனங்களைப் பேசுவது என தமிழக பாஜக இப்போது மீண்டும் அண்ணாமலையை மையமாக வைத்து சுழல ஆரம்பித்திருக்கிறது.

2026 தேர்தலில் தமிழகத்தைவிட்டு திமுக துடைத்து எறியப்படும் என்று ஆவேசப்பட்டிருக்கும் அமித் ஷா, அதற்கான வியூகங்களை வகுக்கவே அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கவும், அதிமுக-வுக்கு வெளியில் இருக்கும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை கூட்டணிக்குள் கொண்டு வரவும் அண்ணாமலைக்கு அமித் ஷா சில அசைன்மென்ட்களை கொடுத்திருப்பதாக பாஜக-வினரே சொல்கிறார்கள். இதன் ஒருபகுதியாகவே, ஓபிஎஸ், டிடிவி, தினகரனை சந்தித்துப் பேசி வருகிறார் அண்ணாமலை.

இந்த வேலைகளை நயினார் வசம் ஒப்படைத்தால் கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம் வரும் என்பதால் இதை அண்ணாமலையிடம் ஒப்படைத்திருக்கிறார் அமித் ஷா.

ஜெயலலிதா காலத்தில் அதிமுக-வில் அவர் தான் எல்லாமே மற்றவர்கள் எல்லாம் அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்து முடிக்கும் களப்பணியாளர்களாக மட்டுமே இருந்தார்கள்.

அந்தக் கட்சியில் அப்படியே இருந்து பழகிவிட்ட நயினார் நாகேந்திரன் இன்னும் முழுமையான பாஜக-காரராக மாறவில்லை. ஆனால், அண்ணாமலை அதற்கு நேர்மாறாக இருக்கிறார். அதனால் தான் அவரை ஆயுதமாக எடுத்துச் சுழற்றுகிறார் அமித் ஷா.

Related Post

Generated Image January 04 2026 7 00PM

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - January 4, 2026 0
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இயற்கையின் முதன்மை வடிவாய்…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…
Gemini Generated Image 6nw0d46nw0d46nw0

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

Posted by - April 11, 2026 0
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்…
sdfgbhnm

அதிமுகவில் இணைந்தது ஏன்?

Posted by - March 13, 2026 0
அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு! நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள்…
tvk cm e1777981664118

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Posted by - May 5, 2026 0
Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக! தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *