அதிகார துஷ்பிரயோகம் – கொதிக்கும் அண்ணாமலை..!!

176 0

முதல்வர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெருக்கமானவரான, திரு.ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள்.

திரு. ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை/துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் திமுகவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை திமுக இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2024 0
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம்…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Posted by - December 27, 2023 0
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *