ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

318 0

 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக உலா வரும் இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது. ஆடிஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இது கூறப்படுகிறது.

ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி?

இந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி என்பதை கீழே விரிவாக காணலாம். இதுதொடர்பாக, ஒரு முறை 3 மாதங்களுக்கு முன்பு அவர் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “என் பிரண்ட்க்கு வர வேண்டியதுதான் எனக்கு வந்துடுச்சு. நான் விஸ்காம் படிச்சுருக்கேன். காலேஜ்ல விஸ்காம்தான் படிச்சேன். டெலிவிஷன் ப்ரொடக்ஷன்லதான் ஸ்பெஷலைஸ் பண்ணேன்.

ஒருநாள் எனக்கு என் ப்ரண்ட்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ஒரு யூ டியூப் சேனல்ல ஒரு கேரக்டர் ஒன்னு இருக்கு. நான் அவளைத்தான் கூப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா அவ அவெய்லபிளா இல்ல. நீ வர்றியா?னு கேட்டா. சரி ஓகே ட்ரை பண்ணி பாப்போம். நாம எல்லாமே கத்துக்குறோம். இதுவும் கத்துப்போமே. ட்ரை பண்ணி பார்ப்போமேனு வந்தது. அது அப்படியே ஒரு அழகான பயணமாக மாறிடுச்சு.

ஆடிஷன்:

நான் பள்ளிக்கூடம் படிக்குறப்பவே மீடியாவுக்கு போகனும்னு முடிவு எடுத்துட்டேன். ஆனா, தொடக்கத்துல எங்கே இருந்து ஆரம்பிக்குறதுனு தெரியல. வீட்ல ஆரம்பத்துல ஒரு சின்ன சின்ன பயம் இருந்துச்சு. இப்போ வீட்ல அடுத்து என்ன நடக்கப்போதுனு அப்டேட் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

2023 மார்ச்ல கால் வந்துச்சு. இந்த மாதிரி ஒரு ரோல் இருக்குது. ஆடிஷன் போகுது. நீங்க ட்ரை பண்றீங்களானு கேட்டாங்க. ஆடிஷன் போனேன். சில நாட்கள்லயே எனக்கு கால் வந்துடுச்சு. 12ம் வகுப்பு முடிச்ச பிறகு சென்னை வந்தேன். காலேஜ் போனேன். ஆரம்பத்துல அப்பா – அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அவங்களை நிறைய பேசி சம்மதிக்க வச்சேன். இதுதான் என்னோட ஆர்வம்னு சொல்லிட்டேன். நம்ம போற பாதை சரினு நமக்கு தெரிஞ்சாலும் சில கடினங்களும் இருக்கும். அது எப்படி வேணும்னாலும் வரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் நம்பர் 1 சீரியலாக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

Posted by - December 14, 2024 0
காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *