vijay 1

CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..!

74 0

CM Vijay Assembly Speech: கடந்த 2017 தொடங்கி 2026 ஏப்ரல் மாதம் வரை ஆண்ட புண்ணியவான்களின் ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்துக்கொண்டு இருப்பதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

CM Vijay Assembly Speech: தவெக ஆட்சிக்கு தேதி குறிப்பவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என, முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் உரை:

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், “பல வருடங்களாக இருக்கும் பதவி வெறி பிடித்த அரசியலை உடைத்து இந்த விஜய் எப்படி செயல்படுவார் என நமது மக்களே சிந்தித்து இருப்பார்கள். ஆனால் அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என மக்கள் 40 நாட்களில் அறிந்து இருப்பார்கள். இது வெறும் தொடக்கம் மட்டும் தான். மாபெரும் சபையில் இருந்து கேட்கிறேன், மக்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். 2017ம் ஆண்டு கடைசியில் இருந்து 2026 ஏப்ரல் மாதம் வரை ஆண்ட இருந்த புண்ணியவான்களின் ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்துக்கொண்டே, படிப்படியாக மக்களுக்கும் நல்லது செய்துகொண்டு வருவோம். இதனால் தான் நமக்கு எதிராக யார் யாரும் சேரவே மாட்டார்கள் என நினைத்தோமோ, அவர்கள் எல்லாம் ஒன்றாக சேருகின்றனர். நம்ம ஆட்சிக்கு தேதி குறிக்கிறார்கள். அவர்களை மக்களே பார்த்துக்கொள்வார்கள்.

 

திமுகவால் தொல்லையோ தொல்லை..

தமிழ்நாட்டின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி தேய்ந்து ஓய்ந்து என வசனம் மாதிரி ரைமிங்காக இல்லாமல் வளமான இலக்கியமாக இதே சபையில் பேசிய ஆட்சியாளர்கள் நடத்திய நிதிமேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அதுமுதல் கண்ணை கட்டுதிங்க. அந்த காலத்தில் தான் பிள்ளையோ பிள்ளை, தொல்லையோ தொல்லை என சொன்னார்கள். அதே மாதிரி தான் அவர்களுடைய ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு தொல்லையோ தொல்லை. இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி வைத்துவிட்டு இவர்கள் சொல்கிறார்கள் நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று.

”தவெக எம்.எல்.ஏக்களுக்கு தெரியாதுங்க..”

நமது அமைச்சர்களுக்கும், நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் தெரியாது என சிலர் விமர்சிக்கின்றனர். ஆமாங்க, எங்களுக்கு தெரியாது தான். எங்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது தான். டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு அதன் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது தான். பதவி உயர்வு வழங்கவும், பணியிட மாற்றம் கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர அதற்காக பணம் பறிக்க தெரியாது தான். பணியிடங்களை உருவாக்க தெரியுமே தவிர, அவற்றை பணத்திற்கு விற்க தெரியாது தான். கோயில்களில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை நடக்க தெரியுமே தவிர, கோயில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது தான். தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது தான். கனிம வளத்தை பாதுகாக்க தெரிந்த அளவிற்கு, கொள்ளையடிக்க தெரியாது தான். அரசு வருமானத்தை அரசு கஜானாவிற்கு மாற்ற தெரிந்த அளவிற்கு தனிப்பட்ட கஜானாவிற்கு மாற்ற தெரியாது தான். போதை கலாசாரத்தை தடுக்க தெரிந்தவர்களுக்கு, அதை வளர்க்க தெரியாது தான். குடும்பத்தில் இருக்கும் பெண்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு ஒசி பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ் இப்படி எல்லாம் பேச தெரியாது தான்.

மக்கள் சேவை தெரிந்த அளவிற்கு சுயநலத்திற்காக உழைக்க தெரியாது. அதனால் தான் எங்களை பார்த்து எதுவும் தெரியாது என சொல்பவர்களுக்கு சொல்கிறோம். உங்களை போன்று முறைகேடு செய்வதை நாங்கள் தெரிந்துகொள்ள போவதில்லை. தெரிந்துகொள்ள ஆசைபடவும் இல்லை. அது கடைசி வரையில் தெரியாமலே இருக்கட்டும். அதனால் நாங்களும் எங்கள் மக்களும் ரொம்ப மகிழ்ச்சி தான்” என முதலமைச்சர் விஜய் சரமாரியாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்தார்.

Related Post

உடம்புல எனர்ஜியே இல்லாம சொங்கி மாதிரி இருக்கீங்களா? அப்ப ‘இந்த’ உணவுகள சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Posted by - November 2, 2023 0
உங்களை எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். ஆனால், உங்கள் எனர்ஜி லெவல் எப்போதும் குறைவாக இருக்கிறதா? ஆம்.…
hair care

தலைக்கு அடிக்கடி குளிக்கலான என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? இனிமே இந்த தப்ப பண்ணாதீங்க…!

Posted by - December 4, 2023 0
நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் உடலை தினமும் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அதில் உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும். நீங்கள் நல்ல முடி…

”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?

Posted by - May 12, 2025 0
வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன்…

இரவு நேரத்துல நெஞ்செரிச்சல் ரொம்ப தொல்லை பண்ணுதா? இப்படி பண்ணுங்க அந்த பிரச்சினையே வராது…!

Posted by - December 21, 2023 0
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்றும் அழைக்கப்படும் இரவுநேர நெஞ்செரிச்சல், அசௌகரியமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கும். பொதுவாக நெஞ்செரிச்சல் அதிக அமில உணவுகளை சாப்பிட்ட…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *