இங்க நான் தான் கிங்கு திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

290 0

சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கி உள்ளார். சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா என பல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

திருமணம் நடக்க சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி தவிக்கும் சந்தானம், அந்த கடனை எப்படி அதே திருமணம் மூலம் அடைக்கிறார் என்பதே இப்படத்தின் கதை களமாக உள்ளது. பொதுவாக சந்தானம் படம் என்றால்காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் காமெடி வேறலெவலாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். படம் முழுக்க காட்சிக்கு காட்சி நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர் என்று தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன் கூட்டணி வேறலெவல் காம்போவாக இருப்பதாகவும் காமெடி, டான்ஸ் என சந்தானம் நன்றாக நடித்து இருப்பதாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். குறிப்பாக டி.இமான் பிண்ணனி இசை, பாடல்கள் நன்றாக‌ இருப்பதாகவும் இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை கூறுகின்றனர்.

Related Post

விஜய் 67வது படத்தில் இருந்து த்ரிஷா விலகியது உண்மையா?- அவரது அம்மா உமா கொடுத்த பதில்

Posted by - February 8, 2023 0
தளபதி 67 விஜய் வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் இணைந்துள்ள இப்டத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு…

விஜய்க்கு புது தலைவலி! லியோ ரிலீஸ் தேதியில் போட்டிக்கு வரும் இன்னொரு பிரம்மாண்ட படம்

Posted by - February 10, 2023 0
லியோ விக்ரம் படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் அதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய்…

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது தான்.. திருநங்கை பிரியா ஷாக்கிங் பேட்டி

Posted by - June 27, 2023 0
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று…

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்

Posted by - March 7, 2025 0
மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *