இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

371 0

தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு கேள்வி பலரது மனதிலும் எழலாம்.

இது ஒருபுறம் இருக்க , மறுபுறத்தில் இதய நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால், பிபி போன்ற பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால் உணவில் எண்ணெயை குறைத்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஏனெனில் எண்ணெய்களில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளன. இயற்கையாகவே நமது உடல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். இந்நிலையில் எண்ணெய்களின் மூலம் கொலஸ்ட்ராலை அதிகம் எடுத்தால், அதன் விளைவாக உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகக்கூடும்.இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க  சமையலுக்கு யூஸ் பண்ணுங்க.. | Peanut Oil Benefits: Reasons To Cook With  Groundnut Oil In Tamil - Tamil ...

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், குறிப்பாக இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களை தேர்வு செய்து சமையலில் பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு எண்ணெய் தான் கடலை எண்ணெய். பலரும் கடலை எண்ணெயில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் என தவிர்ப்பார்கள்.

கடலை எண்ணெய் நல்லதா, கெட்டதா?

உண்மையில் கடலை எண்ணெய் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று. கடலை எண்ணெயில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. துக்கியமாக இதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவு, அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம். அதோடு, இதில் வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்ற இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் உள்ளன.

இது தவிர கடலை எண்ணெயில் ஒமேகா-6 மற்றும் ஒலியிக், லினோலியிக், ஸ்டீரிக், பால்மிடிக் போன்ற அமிலங்களும் உள்ளன. இந்த எண்ணெயை தினசரி உணவில் சரியான அளவில் சேர்த்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, நரம்பு மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது கடலை எண்ணெயை தினசரி சமையலில் பயன்படுத்துவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. இதய ஆரோக்கியம் மேம்படும்

கடலை எண்ணெயில் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களான நல்ல கொழுப்புக்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடிய கொழுப்புக்களாகும். ஆய்வுகளின் படி, இந்த வகை கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்கும் போது இதய நோய்களின் அபாயம் குறைவது தெரிய வந்துள்ளது. அதுவும் இதில் உள்ள வைட்டமின் ஈ, ப்ரீ ராடிக்கல்களால் உடல் மற்றும் இதயத்தில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இரத்த அழுத்தத்தைக் குறைத்த, இதய செயல்பாட்டை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2. கொலஸ்ட்ரால் கட்டுப்படும்

கடலை எண்ணெயில் 100% கொலஸ்ட்ரால் இல்லை. கொலஸ்ட்ரால் என்பது இதயத்தை மோசமாக சேதப்படுத்தக்கூடிய ஒன்று. உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்க வேண்டுமானால், உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வேண்டியது முக்கியம். கடலை எண்ணெய் ஒரு தாவர ஸ்டெராலாக இருப்பதால், இது கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுப்பதோடு, அவற்றைக் குறைக்கவும் உதவுகிறது.

அதோடு இந்த எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் இருந்தால், அது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைத் தடுத்து, இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்படும்

சில ஆய்வுகளில் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சர்க்கரை நோயாளிகளின் உடலில க்ளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுவதாக தெரிய வந்துள்ளன. சாச்சுரேட்டட் கொழுப்புக்களை விட பாலிஅன்சாச்சரேட்டட் கொழுப்புக்களை உட்கொள்ளும் போது, அது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தங்களின் சமையலில் கடலை எண்ணெயை சேர்த்துக் கொள்வது நல்லது.

4. புற்றுநோயைத் தடுக்கும்

கடலை எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. கூடுதலாக, இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பைட்டோகெமிக்கல்கள் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவை. பல்வேறு ஆய்வுகளின் படி, பைட்டோஸ்டெரால்கள் மற்றும் பீட்டா சிடோஸ்டெரால்கள் குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பளிப்பதாக தெரிய வந்தள்ளது. எனவே புற்றுநோய் தாக்குதலைக் குறைக்க வேண்டுமானால், கடலை எண்ணெயை தினசரி சமையலில் சேர்த்து வாருங்கள்.

5. அல்சைமரைத் தடுக்கும்

வேர்க்கடலையில் நியாசின், வைட்டமின் ஈ, ஆரோக்கியமான அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் அல்சைமர், வயது தொடர்பான அறிவுசார் குறைவு பேன்ற அறிவாற்றல் கோளாறுகளைத் தடுக்கும். அதுவும் இதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது, நினைவாற்றலை ஆதரிக்கிறது, அறிவாற்றலை வலுப்படுத்துகிறது மற்றும் டிமென்ஷியாவின் அறிகுறிகளைத் தடுக்கிறது.

Related Post

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

மூட்டுக்களை வலுவாக்கும் கருடாசனம்

Posted by - March 9, 2023 0
வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது…

தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?

Posted by - March 28, 2025 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில்,…
health

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

Posted by - December 2, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *