காளான் பிடிக்குமா? காளானை வெச்சு இந்த மாதிரி டிக்கா மசாலா செய்யுங்க.. இன்னும் சூப்பரா இருக்கும்..

377 0

நீங்கள் காளான் பிரியரா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் காளானை வீட்டில் செய்வீர்களா?

சற்று வித்தியாசமான முறையில் காளானை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் டிக்கா மசாலா செய்யுங்கள். இந்த காளான் டிக்கா மசாலா சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அதோடு சாதத்துடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு காளான் டிக்கா மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் டிக்கா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.காளான் பிடிக்குமா? காளானை வெச்சு இந்த மாதிரி டிக்கா மசாலா செய்யுங்க.. இன்னும்  சூப்பரா இருக்கும்.. | Mushroom Tikka Masala Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* காளான் – 2 கப் (இரு துண்டுகளாக்கப்பட்டது)

* குடைமிளகாய் – 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)

* தயிர் – 1/4 கப்

* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கசூரி மெத்தி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.

* பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் காளானை சேர்த்து வதக்க வேண்டும். காளானில் இருந்து நீர் வெளியேறி வற்றியதும், அதில் தயிர் கடலை மாவு கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* காளான் நன்கு வெந்து, மசாலாவில் உள்ள பச்சை வாசனை நீங்கி, கிரேவி சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கசூரி மெத்தி மற்றும் எலுமிச்சை சாற்றினைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காளான் டிக்கா மசாலா தயார்.

Related Post

‘இனி இவருக்கு பதில் இவர்’ எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை. அடடே இவரா ?

Posted by - January 6, 2023 0
சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து கம்போஸ் பின்…

பிக் பாஸ் Voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்

Posted by - January 18, 2023 0
பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அதற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்பது வார இறுதியில்…

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: கிரீன் பிரியாணி

Posted by - March 20, 2023 0
கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப்,…
zee tamil

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ

Posted by - May 20, 2026 0
ஜீ தமிழ் ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது. இதில்…

குளிர்காலத்தில் ஹீட்டர இப்படி பயன்படுத்தி பாருங்க.. ஈபி பில் மிச்சமாகும்.!

Posted by - December 24, 2024 0
வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் டிவைஸ்களை வாங்கும் போது, ​​அவற்றின் நட்சத்திர மதிப்பீட்டில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் டிவைஸ்-இன் நட்சத்திர மதிப்பீடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *