இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை

242 0

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை❤️

மேஷம்✅

உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகளின் அதிக சுமையால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்

ரிஷபம்✅

பழக்கத்தின் மூலமாக பணப் புழக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வீர்கள். காதலி கேட்ட துணிமணியை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்

மிதுனம்✅

வண்டி வாகனங்கள் தக்க சமயத்தில் வேலை கெடுவதால் டென்ஷனாவீர்கள். சகோதர சகோதரிகளின் சண்டையால் மரியாதை இழப்பீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். பத்திரகாளியாக மாறும் மனைவியை மாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். பணியின் காரணமாக மூச்சு திணறல் நோய்க்கு ஆளாவீர்கள். விபத்து ஏற்பட்டு சிறிய சாயம் அடைவீர்கள்

கடகம்✅

வியாபாரப் போட்டியால் சின்ன நஷ்டம் அடைவீர்கள். தொழிலில் எதிர்த்து பார்த்தபடி முன்னேற்றம் ஏற்படாமல் சுணக்க நிலையை காண்க. கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாவதால் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்குவீர்கள். வேலை இடத்தில் செய்யாத குற்றத்திற்காக குறை கூறப்படுவீர்கள். கைப் பொருள்களை பத்திரமாக வைத்திருங்கள்.

சிம்மம்✅

நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வை அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். உபரி வருமானத்தில் பழைய பாக்கிகளை அடைப்பீர்கள். பிள்ளைகளின் கல்வித்திறனால் பெருமைப்படுவீர்கள்

கன்னி✅

பெரியவர்களின் ஆசியால் பல நல்ல காரியங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் நல்ல காண்ட்ராக்ட்களை பெறுவீர்கள். உங்கள் நடத்தையால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை தவிடு பொடியாக்குவீர்கள்.

துலாம்✅

உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகளின் எண்ணத்தை மன உறுதியால் வெற்றி பெறுவீர்கள். தொழிலுக்கு இருந்த இடையூறுகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அதிக வருமானம் பெற மாட்டீர்கள். பணவரவு செலவில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாற்றம் அடைவீர்கள்

விருச்சிகம்✅

மூளைக்குள் திட்டம் தீட்டி வேலைக்கு வடிவம் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாததால் உடல் சோர்வு அடைவீர்கள். அரசு வேலைகளில் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் தொய்வான நிலையை காண்பீர்கள். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

தனுசு✅

ஏட்டிக்குப் போட்டியாக பேசிய இல்லத்தரசி இணக்கமாக இருப்பார். பந்தயங்கள் லாபத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் அமோகமாக நடக்கும். பங்குப் பரிவர்த்தனைகள் உயர்ந்த நிலைக்கு செல்லும். வேலை இடத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும். கையில் பணம் தாராளமாக புரளும். உற்சாகமான பேச்சால் உறவுகளை மேம்படுத்துவீர்கள்

மகரம்✅

இரும்பாக இருக்கும் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுப்பீர்கள். தொந்தரவு கொடுத்த நோய் விலகும்.

கும்பம்✅

பணப்புழக்கம் இருந்தாலும் கை மீறி போகும் செலவால் கவலைப்படுவீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கம் கெடுவீர்கள். மனைவி மக்கள் உறுதுணையாக இருப்பதால் சற்று நிம்மதி அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தகுந்த நேரத்தில் பெறுவீர்கள். தொழில்துறை சரளமாக நடக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான லாபம் காண்பீர்கள்.

மீனம்✅

வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனும் அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

 

Related Post

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்

Posted by - September 1, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில்…

பலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. ஷாக்கிங் தகவல் கூறிய பாடகி ஜோனிடா காந்தி

Posted by - June 17, 2025 0
ஜோனிடா காந்தி தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த காலத்தில் விரல்விடும் அளவிற்கு பாடகர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது கணக்கே இல்லாமல் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள்…

சூரிய காந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா..? கெட்டதா..? நிபுணர்கள் பதில்.!

Posted by - October 7, 2025 0
சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.சூரியகாந்தி எண்ணெய் இப்போதெல்லாம் பிரபலமான சமையல்…

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *