இமாச்சலில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு

236 0

சிம்லா:

தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில பேய்மழை பெய்தது.இமாச்சலில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு | 88  people lost their lives due to heavy rains in himachal-pradesh

இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின.

333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிம்லா – மணாலி, சண்டிகர் – மணாலி, சிம்லா – குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேரை காணவில்லை என்றும், 100 பேர் காயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Post

Generated Image February 06 2026 10 50AM

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

Posted by - February 6, 2026 0
 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 25 ஆண்டுகளில்…

வங்கியில் லோன் வாங்கப்போறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க!

Posted by - October 29, 2024 0
லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில்…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *