%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக

66 0

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் குவிந்து வருகிறது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இதுதொடர்பாக, அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்திற்கு எதிரானது:

கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா விஜய்?

அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?

 

தமிழகம் உரிமை காக்கப்படுமா?

புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கண்டனம்:

ஜனநாயகன் படத் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவின் தொழில் முழுக்க முழுக்க கர்நாடகாவிலே அமைந்துள்ளது. இவர் இதற்கு முன்பு அரசியலில் எந்த தொடர்பும் இல்லாதவர். இவர் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி வெங்கட் நாராயணாவிற்கு தமிழும் பெரியளவு தெரியாது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு நாலாபுறமும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Related Post

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…
livetelecast tngovnt

“சட்டப்பேரவை முழு நேரலை வெறும் உருட்டா?” – தவெகவுக்கு அதிமுக கண்டனம்

Posted by - June 19, 2026 0
சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “நேரலை என்பது வெறும் உருட்டா?. ஆட்சி மாறினாலும்…

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *