ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

235 0

ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகான். ஆனால் அதிமுக வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. எடப்பாடி தலைமையிலான அதிமுக போட்டியிட்டாலும் இரட்டை இலை கிடைக்குமா என்பது குறித்து தெளிவில்லாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 27.2.2023 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத்தொகுதிக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக K.S.தென்னரசு, Ex M.LA., (ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

K.S.தென்னரசு 2001 ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் , 2016-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.கவும் இருமுறை எம்.எல்.ஏ.வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

Posted by - May 31, 2025 0
ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை…

பொதுமக்களே கவனம்… அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்…

Posted by - September 26, 2023 0
சென்னை: நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:- செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு…

“86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்

Posted by - August 9, 2025 0
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

Posted by - August 20, 2025 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும்…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *