TVKAIADMKEPS

ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்

65 0

ADMK TO TVK: அதிமுக மூத்த தலைவர்களை தவெகவிற்கு அழைத்து வருபவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என தவெக வாக்குறுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் தொடர் தோல்வி

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அசைக்க முடியாத கட்சியாக அதிமுக இருந்தது. 20217ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தலைமையை கைப்பற்ற நடைபெற்ற போட்டியில் பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என மோதிக்கொண்ட நிலையில், கடைசியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை கைப்பற்றினார். இதனையடுத்து அவரது தலைமையின் கீழ் கடந்த 9 வருடங்களாக அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்விக்கு மேல் தோல்வியே பரிசாக கிடைத்தது.

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்

இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு பல்டி அடித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு மூத்த நிர்வாகிகள், மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என படையெடுத்து வருகிறார்கள். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல்,தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த நிலையில், அடுத்து அடுத்து நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

அதிமுகவை காலி செய்ய தவெக திட்டம்

ஆனால் தவெகவிடம் கிளைக்கழகம் முதல் மாவட்ட, மாநில பணிகளை சரிவர செய்ய சரியான கட்சி நிர்வாகிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. எனவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே கட்சியை பலப்படுத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. எனவே அதிமுகவை ஒட்டுமொத்தமாக தவெக பக்கம் இழுக்க அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக மூத்த தலைவரான ஆதவ் அர்ஜூனாவிற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தவெகிற்கு அழைத்து வருபவர்களுக்கு ஜாக்பாட் பரிசாக கட்சியில் பதவிகள் மட்டுமல்ல, வாரிய தலைவர் பதவியும்  வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிமுகவில் இருந்து 30 சதவிகித நிர்வாகிகள் தவெகவிற்கு சென்றுள்ளனர்.

அதிமுகவினருக்கு ஆடி ஆஃபர்

எனவே வரும் நாட்களில் அதிமுகவில் இருந்து அதிகளவு நிர்வாகிகள் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அந்த அந்த மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் இணைப்பு விழாவை நடத்தவும் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பை தவெகவில் இணைந்த அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தவெகவின் இந்த திட்டத்தை அதிமுக உடைக்குமா.? அல்லது எப்போதும் போல போனால் போகட்டும் என கண்டுகொள்ளாமல் இருக்குமா.? என கேள்வி எழுந்துள்ளது.

Related Post

வரும் காலத்தில் தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம்… அமித்ஷா பரபரப்பு பேச்சு..!

Posted by - June 11, 2023 0
வரும் காலத்தில் தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம்… அமித்ஷா பரபரப்பு பேச்சு..! வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என அமித்ஷா பேசியுள்ளார். அடுத்த வருடம்…
Generated Image January 06 2026 1 11PM

விஜய் சொன்ன முக்கிய தகவல்..

Posted by - February 2, 2026 0
தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம்…

விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

Posted by - July 31, 2025 0
நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள்…
annamlai bjp

Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்!

Posted by - June 2, 2026 0
தமிழக பாஜக-வில் இருந்து அண்ணாமலை விலகினால், தமிழ்நாட்டில் பாஜக-வின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக பாஜக…
sdbi

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *