Generated Image January 19 2026 11 05AM

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

128 0

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை கோர்க்கவுள்ளனர்.

திமுகவை வீழ்த்த திட்டமிடும் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு மக்களவை தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணியோடு வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொள்ள திமுக முடிவு செய்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் காங்கிரஸ் கட்சி திடீரென போர்கொடி தூக்கிய நிலையில், தேசிய தலைமையின் உத்தரவின் காரணமாக கப் சிப் ஆகியுள்ளது காங்கிரஸ்.

டிடிவி தினகரன் அரசியல் மாற்றம்

இந்த நிலையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. இதற்கு ஏற்ப பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக பாமகவையும் தங்கள் அணியில் இணைத்துள்ளார். அடுத்தாக தேமுதிக மற்றும் அமமுகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் நீடித்த டிடிவி தினகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என அறிவித்தார்.  துரோகி எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவேன் எனவும் கூறியிருந்தார்.

ஒரே மேடையில் இபிஎஸ்- டிடிவி தினகரன்

இதற்கு ஏற்ப கடந்த சில வாரங்களாக டிடிவி தினகரன் விஜய் கட்சியோடு கூட்டணி வைக்கப்போவதாக தகவல் வெளியானது. விஜய்க்கு ஆதரவாகவும் பல கருத்துகளை டிடிவி தினகரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்த டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டார். இதனை ஆரம்பத்தில் மறுத்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அதிமுக- பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவது உறுதியாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் ஏறவுள்ளனர்.

முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்- ஓகே சொன்ன டிடிவி

இதனையடுத்து 23ஆம் தேதி கூட்டத்திற்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் தங்களது தொண்டர்களை அழைத்து வர டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என உறுதியாக இருந்த டிடிவி தினகரன் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து விட்டு அம்மா ஆட்சி அமைய துணையாக இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Related Post

Generated Image November 13 2025 10 14AM

“பவளவிழா பாப்பா… நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா!” – திமுக மீது விஜய் தாக்கு

Posted by - November 13, 2025 0
தவெக-வின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்று அதிகார மயக்க முழக்கம் செய்வதாக திமுக தலைவரும், முதல்வருமான…
ASDFGH

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…
dddd e1776493415184

“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 18, 2026 0
கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள்…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *