tvkvijay cm

TVK Vijay : ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்க… ஆளுநருக்கு கடிதம் எழுதிய விஜய்.! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.?

81 0

TVK leader Vijay letter to the governor : தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்

ஆட்சியை இழந்த திமுக- கெத்து காட்டிய தவெக

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திமுக தோல்வியை தழுவியது. யாரும் எதிர்பாராத வகையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இதே போல திமுக அமைச்சர்கள் 16 பேர் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாக முன்னிலையில் உள்ளது. அடுத்தாக திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மை கிடைக்காத தவெக

இருந்த போதும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எந்த கட்சியும் எட்டாத காரணத்தால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மையோடு யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க தவெக திட்டமிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாமகவின் ஆதரவையும் பெற தவெக காய் நகர்த்தி வருகிறது.

ஆளுநருக்கு விஜய் கடிதம்

இந்த நிலையில் தமிழகத்தின் ஆளுநர் தற்போது கேரளாவில் உள்ளார். இன்று இரவு சென்னை வரவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு  தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி தவெகவை ஆட்சி அமைக்க அழைக்கும் படியும், இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

 

Related Post

dmdk

’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’

Posted by - February 19, 2026 0
’அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நேரத்தில், கடைசி நேரத்தில் களத்தில் குதித்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்காக கூட்டணி கணக்கையே மாற்றியிருக்கின்றனர்’ எந்த…
Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

Posted by - August 22, 2025 0
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று…

’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

Posted by - September 18, 2025 0
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி. நாம் தும்மினாலும்…
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

TVK ADMK : ”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை

Posted by - June 13, 2026 0
TVK ADMK: சனிக்கிழமை தோறும் விஜய் அண்ணா கட்சியினர் ஆள்பிடித்துச் செல்வதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். TVK ADMK: கவர்ச்சியால் தவெகவிற்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *