ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

177 0

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே பாணியில் ஒரு படத்தையும்  இயக்கியுள்ளனர். இது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தையும் உண்டு பண்ணும். இவ்வாறு  நம்மை குழப்பிய சில திரைப்படங்கள்.

பசும்பொன் மற்றும் கும்மிபாட்டு – இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக சிவகுமார், ராதிகா மற்றும் பிரபு ஆகியோர்  நடித்திருப்பார்கள். இரண்டு படமும் கிராமத்து பின்னணியை மையப்படுத்தியே இருக்கும். கதையின் நாயகன் பிரபு இரண்டிலுமே தன் பெற்றோர்களிடம் கோபப்பட்டு தனியாக வசிப்பார். இந்த இரண்டு படங்களையும் பார்க்கும் ரசிகர்கள் குழப்பத்தில் படத்தின் பெயரை மாற்றி கூறுவதும் உண்டு. பசும்பொன் திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியுள்ளார். கும்மிப்பாட்டு திரைப்படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கியுள்ளார்.

காலம் மாறிப்போச்சு மற்றும் விரலுக்கேத்த வீக்கம் –  இந்த இரு படங்களும் மூன்று நாயகர்களின் குடும்பங்களை பற்றி எடுக்கப்பட்டிருக்கும். குடும்பத்தை சரியாக கவனிக்காத நாயகர்கள், அதனால் உண்டாகும் பிரச்சனைகள் இதுவே இந்த படங்களின் கதை. இந்த இரண்டு படங்களையும் வி சேகர் இயக்கி, திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரித்துள்ளது.

கண்ணுக்குள் நிலவு மற்றும் காதலுக்கு மரியாதை – நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப் பட வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த நடிகர்களை கொண்டு கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக  நடிகர் விஜய், ஷாலினி, சார்லி, தாமு, ஸ்ரீவித்யா போன்றோர் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் பாசில் இயக்கியுள்ளார்.

கந்தா கடம்பா கதிர்வேலா மற்றும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக பிரபு, எஸ் வி சேகர், விவேக், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். நாயகர்கள் தங்கள் மனைவிகளை சமாளிப்பது போன்ற கதையே இந்த இரண்டு படத்தின் கதை. இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் ராம நாராயணன் இயக்கியுள்ளார்.நம்மை அதிக அளவில் குழப்பியதில் இந்தப் படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரே அம்சத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த திரைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்தது.

Related Post

Generated Image November 25 2025 11 22AM

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - November 25, 2025 0
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.…
divorce

ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.. ஷாக்கிங் புகைப்படம்

Posted by - December 6, 2023 0
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.…
Generated Image February 17 2026 6 44PM

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

Posted by - February 17, 2026 0
சூர்யா முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் வெளிவரவுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தேர்தல் முடிந்தபின் வெளிவரும்…

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

Posted by - March 13, 2024 0
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக…

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 3, 2023 0
பொன்னியின் செல்வன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *