ஓபிஎஸ் தாயார் ஓ.பழனியம்மாள் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

284 0

ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து தேனி சென்றார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது தாயாரின் முகம் பார்த்தும் காலை பிடித்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர்,  “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Related Post

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - டிசம்பர் 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…
கடல் ஆம்புலன்ஸ் திட்டம் குறித்து அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தூத்துக்குடியில் அளித்த பேட்டி

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 2027 ஏப்ரலில் தொடக்கம்: அமைச்சர்

Posted by - நவம்பர் 22, 2026 0
கடல் ஆம்புலன்ஸ் திட்டம் வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச்…

உடம்புல எனர்ஜியே இல்லாம சொங்கி மாதிரி இருக்கீங்களா? அப்ப ‘இந்த’ உணவுகள சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Posted by - நவம்பர் 2, 2023 0
உங்களை எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். ஆனால், உங்கள் எனர்ஜி லெவல் எப்போதும் குறைவாக இருக்கிறதா? ஆம்.…
ch rain

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

Posted by - டிசம்பர் 1, 2023 0
ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்… சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால்…
ss

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - மார்ச் 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன