ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

262 0

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வால்மீன்கள் என்பது தூசி, பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆன சூரிய குடும்பத்தின் உருவாக்கத்தின் போது மீதான பொருட்களின் தொகுப்பு. அவை சில மைல்கள் முதல் பத்து மைல்கள் வரை அகலம் கொண்டவை, பொதுவாக அவை சூரியனுக்கு அருகில் சுற்றும் போது அதிகமாக வெப்பமடைந்து வாயுக்கள் மற்றும் தூசிகளை இழுத்து ஒரு கிரகத்தை விட பெரியதாக இருக்கும்.

சமயங்களில் இந்த வால் மீன்கள் மில்லியன் கணக்கான மைல்கள் நீளத்திற்கு கூட வாலை கொண்டு இருக்கும் வால் நட்சத்திரங்கள் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் உறைந்த வாயுக்கள், பாறைகள் மற்றும் தூசிகளின் பனிக்கட்டிகள் தொகுப்பு ஆகும். இவை பொதுவாக பூமிக்குள் வரும் போது வளிமண்டல உராய்வு காரணமாக சாம்பல் ஆகும்.ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று  பார்த்தால் ஷாக்! | A comet seen above the Thanjavur Big Temple causes  confusion among the ...

இதனால் அவர் தீ பிடித்து பெரிய வெளிச்சமான தோற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி பலருக்கும் இந்த வால் நட்சத்திரம் கண்ணில் படும். இந்த நிலையில்தான் நேற்று தஞ்சையிலும் இது தென்பட்டது.

தஞ்சாவூர் வால் நட்சத்திரம்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி நேற்று தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் தோன்றி உள்ளது. பொதுவாக இதை பார்ப்பது பலரும் அபசகுனம் என்று நினைப்பார்கள். அதே சமயம் சில கலாச்சாரங்களில் இதை பார்த்தால் நியாப மறதி ஏற்படும் என்று கூறுவார்கள். இன்னும் சில ஐதீகங்களில்.. இதை பார்த்தால்.. நாம் விரும்பியதை வேண்டிக்கொள்ளலாம். அது பெரிய அளவில் பலன் அளிக்கும்.

நாம் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்று கூறுவார்கள். இப்படி பல கலாச்சாரங்களில் பல விதமாக இதை பற்றி பேசுவார்கள்.

தமிழ்நாடு சோழர்கள் காலம்: தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் ஒரு சிலர் இடையே இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்டது. முக்கியமாக ஆட்சியாளர்களுக்கு கெட்டது என்று பார்க்கப்பட்டது. முக்கியமாக பொன்னியின் செல்வன் படத்தின் கதையே கூட இதன் அடிப்படையில்தான் தொடங்கும். ஆனால் இந்த வால் நட்சத்திரம் கெட்டதா இல்லையா என்பதெல்லாம் இதுவரை நிரூபணம் ஆகவில்லை.

இயற்பியல் நிகழ்வு; அது ஒரு சாதாரண இயற்பியல் நிகழ்வு. சூரியன் உதிப்பது, மறைவது போல் இதுவும் இயற்பியல் நிகழ்வு அவ்வளவே. ஆனாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் இது தெரிவதுதான் விவாதத்திற்கு அதிக காரணம்.

ஆட்சியாளர்கள்: தஞ்சை பெரிய கோவில் ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு ராசி இல்லாத கோவில் என்பார்கள். அங்கே சென்றால் ஆட்சியாளர்கள் பதவி இழப்பார்கள் என்ற நம்பிக்கை கூட உள்ளது. இப்படிப்பட்ட நிலையத்தில்தான் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் அர்த்தம் என்னவாக என்று பலரும் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.

Related Post

“எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் விடாமல்..” – எஃப்ஐஆரில் வெளிவந்த ஞானசேகரனின் கோர முகம்!

Posted by - December 26, 2024 0
பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரியாணி வியாபாரியாக உள்ள ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா…

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

Posted by - October 4, 2023 0
சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்…
vijay cm tn

TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?

Posted by - May 10, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், சபாநாயகர் பதவியை தவெக தங்கள் வசம் தக்கவைக்குமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக…
MUTHUKALAI

மனைவியின் உயிரை காப்பாற்றி தாருங்கள்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை

Posted by - May 16, 2026 0
முத்துக்காளை தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக வடிவேலுவுடன்…

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- உதயநிதி பதிவு …

Posted by - November 30, 2022 0
பிறந்த நாள் அன்று என்னை வாழ்த்திய, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை மீடியாவினர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *