ch rain

கொட்டி தீர்த்த கனமழை.. இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை

352 0

ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்…

சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நேற்று இரவு பெய்த மழையால் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் 2வது நாளாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகினர். அங்குள்ள இருசக்கர வாகன சுரங்கப்பாதை முற்றிலும் மூழ்கியதனால் கோடம்பாக்கம் பகுதியே தீவு போல் காட்சியளித்தது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு மழை கொட்டித்தீர்த்தது.இதே போன்று, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், முகப்பேர், சைதாப்பேட்டை, கிண்டி, அம்பத்தூர், வில்லிவாக்கத்திலும் தொடர்ந்து மழை பெய்தது. கனமழையால், தியாகராய நகர் பசுல்லா சாலையில் மழைநீர் தேங்கியது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொரட்டூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குள் மூன்று அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியுற்றனர். மேற்கு மாம்பலத்தில் பெரும்பாலான தெருக்களை மழைநீர் ஆக்கிரமித்தது. கே.கே.நகர், அசோக்நகரில் குளம் போல் சாலைகள் காட்சியளித்தன. கனமழையால், பெருங்களத்தூரில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. கீழ்கட்டளை அருகே மூவரசம்பட்டு ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. கீழ்கட்டளையில் மழைநீர் ஆறாக ஓடிய சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி கீழே விழுந்தார். மேடவாக்கம் விஜிபி பாபு நகர் பிரதான சாலையில் பூண்டு ஏற்றி சென்ற வாகனம் மழைநீரில் கவிழ்ந்தது. இதே போல், மேடவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றோர் தவறி விழுந்தனர்.

Related Post

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது: சுற்றுலா பயணிகள் பீதி

Posted by - November 10, 2023 0
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கிழக்கே வங்க கடலும் தெற்கே இந்திய பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் அமைந்து உள்ளன. இதனால் இந்த முக்கடல் சங்கமத்தை பார்த்து ரசிப்பதற்காக இந்த 3…
Generated Image November 22 2025 6 06PM

ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

Posted by - November 22, 2025 0
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால்…

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது

Posted by - September 25, 2023 0
சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை…

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - February 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *