கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

219 0

சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

காசா இனப்படுகொலையைக் கண்டித்தும் சுதந்திர பாலஸ்தீனம் அமைய ஆதரவு தெரிவித்தும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிபிஎம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.

இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்.” என தெரிவித்தார். இந்த கருத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் பதிவை டேக் செய்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?

பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?. கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை.” என விமர்சித்துள்ளார்.

Related Post

erthjhgfdsaq

வாக்கு எண்ணிக்கை மையங்களில் திடீர் மாற்றம்? தேர்தல் ஆணையத்தின் நள்ளிரவு உத்தரவு – கலக்கத்தில் வேட்பாளர்கள்!

Posted by - April 25, 2026 0
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து, தற்போது அனைவரின் கவனமும் வாக்கு எண்ணிக்கை மையங்களின் (Counting Centers) மீது திரும்பியுள்ளது.…

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

Posted by - May 1, 2026 0
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும்,  திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன்…

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - October 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…
dmdk 2 e1776320866955

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *