காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

214 0

டிஆர்பி-யில் டாப் 10 இடத்தில் இருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்தது மட்டுமல்லாமல், அவர் அந்த வீடியோவில் சோகமாக பேசியதால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து கதாநாயகி சந்தியா கேரக்டரில் நடித்து வரும் ரியா தற்போது சீரியலை விட்டு விலகுவதாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார்.

 

அதன் பிறகு இதில் வில்லியாக நடித்த அர்ச்சனாவும் விலகினார். இப்படி அடுத்தடுத்து சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் விலகுவது ராஜா ராணி 2 சீரியலின் டிஆர்பி-க்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இதில் கடந்த சில நாட்களாகவே காந்தாரா படத்தை அப்படியே காப்பி அடிப்பது போல் சீரியலின் கதாநாயகன் சரவணன் மாறி விடுவது சின்னத்திரை ரசிகர்களை எரிச்சலடைய வைக்கிறது.

இப்போது சீரியலின் ஹீரோயினும் ஒரு வருட காலம் முடிவடைந்தது என மூட்ட முடிச்ச கட்டிக்கொண்டு கிளம்புவது மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவருக்கு பதில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ராமன் தேடிய சீதை சீரியலின் கதாநாயகி ஆஷா கௌடா இனிவரும் நாட்களில் சந்தியாவாக நடிக்கப் போகிறார்.

 

மேலும் ரியா புதிய சீரியலில் நடிக்கப் போவதாகவும் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதால், அவர் எந்த சேனலுக்கு செல்கிறார், எந்த சீரியலில் நடிக்கிறார் என்பதை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் ரியா லைவ் வீடியோவில் பேசும்போது அழுவது போல் சோகமாக பேசியிருந்தால் ராஜா ராணி 2 சீரியலில் அவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்குமோ என்றும், அது என்ன என்பதையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Related Post

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - September 3, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அறிவுக்கரசியிடம் ஈஸ்வரி போன்…

ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Posted by - April 5, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் எல்லோரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் அந்த பிரிவை பர்மனென்ட் ஆக மாற்ற ஜீவாவின் வில்லன் மாமனார் பல்வேறு செயல்களை…

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்

Posted by - May 3, 2023 0
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தும் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி. பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வெளியே அனுப்பியது முதல் தற்போது ராதிகா கோபி வீட்டிலேயே…

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023 0
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை…

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கிளைமாக்ஸ் போட்டோ வைரல்

Posted by - October 10, 2023 0
விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 1300 எபிசோடுகளை கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *