கைகள், தோள்பட்டை, கால்களுக்கு வலிமை தரும் அர்த்த பூர்வோத்தானாசனம்

232 0

அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’ (to stretch), ‘ஆசனம்’ என்றால் ‘நிலை’; அதாவது, பாதி கிழக்கு பகுதியை தீவிரமாக நீட்டும் நிலை. இந்த நிலையில் பார்ப்பதற்கு, ஒரு மேசை போலத்தான் இருக்கும்.கைகள், தோள்பட்டை, கால்களுக்கு வலிமை தரும் அர்த்த பூர்வோத்தானாசனம் | Reverse  Table Top Pose ardha purvottanasana

ஆங்கிலத்தில் Reverse Table என்பது சரியான பொருத்தமாகத் தெரியவில்லை. இந்த ஆசனத்தில் நிற்பது மணிக்கட்டு, கை, தோள், கால், தொடை என நான்கு கால்களும் பலமாகும். ஆனாலும், இதன் பலன் என்பது இடுப்பும், முதுகுத்தண்டு புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி தள்ளப்பட்டு அதிலேயே நிற்பதனால் முதுகுத்தண்டு, முதுகு தசைகள், இடுப்பு மட்டுமல்ல, உடலின் முன் பகுதி (கிழக்கு பகுதி) உந்தப்படுகிறது.

இதனால் அனைத்து உள் உறுப்புகளும் நன்றாக இயங்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் தலைக்கு நன்றாகப் பாய்ச்சப்படுகிறது. இந்த பலனுக்காகத்தான் நான்கு கால்களில் நிற்பது. கை, கால்களுக்கு கிடைக்கக் கூடிய

நுரையீரலை பலப்படுத்துகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

செய்முறை

விரிப்பில் கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும். கால் முட்டியை மடக்கி பாதங்களை தரையில் வைக்கவும். கைகளை புட்டத்திற்கு சில அங்குலம் பின்னால் தரையில் வைக்கவும். கை விரல்கள் உங்களை நோக்கியவாறு இருக்க வேண்டும். பாதங்களையும் கைகளையும் தரையில் அழுத்தி மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பை மேலே உயர்த்தவும். மார்பிலிருந்து கால் முட்டி வரை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

கைகள் நேராக இருக்க வேண்டும். மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கணுக்கால்கள் கால் முட்டிக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும். தலையை பின்னால் சாய்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.

குறிப்பு

முதுகு, இடுப்பு, தோள், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். கழுத்து வலி உள்ளவர்கள் தலையை பின்னால் சாய்க்காமல் நேராக வைக்கவும்; அல்லது மார்பில் முகவாய் படுமாறு வைக்கவும். இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும். பழகப் பழக நன்றாக உயர்த்த வரும்.

Related Post

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Posted by - May 29, 2023 0
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 8…

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்!

Posted by - March 10, 2025 0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த…

டெய்லி ‘இத்தனை’ மணி நேரத்திற்கு மேல உட்கார்ந்து இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கிறதாம்!

Posted by - October 18, 2023 0
இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறையால் ஆபத்தான சுகாதார நிலைகளை நீங்கள்…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *